2000 வருஷத்துக்கு தாங்கும் அயோத்தி ராமர் கோயில். எப்படி தெரியுமா?
அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் எவ்வளவு முடிந்துள்ளன? எத்தனை கோடி இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளது? அதில் நன்கொடை எத்தனை? கட்டுமான பணிகளின் சிறப்பம்சங்கள் என்னென்ன ?என்பதை “த காரிகை”யின் சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்.
அயோத்தி ராமர் கோவில் முழு விவரம்
சதுர அடி பரப்பளவு – 54,700
நீளம் – 360 அடி
அகலம் – 235 அடி
தரையில் இருந்து கோவில் உயரம் – 16.5 அடி
குவி மாடங்கள் – 5
மொத்த தளங்கள் – 3
ஒவ்வொரு தளத்துக்குமான இடைவெளி – 20 அடி உயரம்
தரைதள தூண்கள் – 160
முதல் தள தூண்கள் – 132
இரண்டாவது தள தூண்கள் – 74
நுழைவாயில்கள் – 12
திருக்கோபுர உயரம் – 161 அடி
கோவிலுக்கான பட்ஜெட் விவரம்
ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்தக்ஷேத்ரா அறக்கட்டளை – ரூ. 1800 கோடி
ராம பக்தர்களின் காணிக்கை – ரூ.3,400 கோடி
கோவில் கட்டுமான செலவு – ரூ.900 கோடி (பிப்ரவரி 5 2020 முதல் மார்ச் 31 2023 வரை)
ராமர் பிரதிஷ்டை – ரூ. 300 முதல் 400 கோடி
அறக்கட்டளை வங்கி இருப்பு – ரூ 3000 கோடி
(கட்டுமான செலவு போக மீத பணம் அயோத்தியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் எனக் கோவில் அறக்கட்டளை தகவல்)
ராமர் கோவிலில் வசதிகள்
அருங்காட்சியகம்
உணவகம்
ஒரே நேரத்தில் 70,000 பேர் தரிசனம் செய்ய வசதி
3 அடுக்குகளில் மரங்கள் நடவு
கோவிலைச்சுற்றி மிகப்பெரிய நந்தவனம்
கட்டுமான நிபுணர் குழு
ஐஐடி வல்லுநர்கள்
டாட்டா குழுமம்
எல் அண்ட் டி சிறப்பு பொறியியல் வல்லுனர் குழு
கோவிலின் சிறப்பு அம்சம்
ராமர் கோவில் கட்டுமானம் நீண்ட ஆயுள் கொண்டது
கற்களால் கட்டப்பட்டுள்ளதால்தான் ஆயுள் நீடிக்கும்
வலிமையான கட்டிடக்கலையை பறைசாற்றும் கற்கள் கொண்டுள்ளன
இரும்பு தூண்கள் துருப்பிடிக்கும் என்பதால் கல் தூண்கள் அமைப்பு
நிலநடுக்கம் இயற்கை சீற்றத்தில் பாதிக்காத வகையில் கட்டுமானம்
ஒவ்வொரு கல்லிலும் குழி தோண்டப்பட்டு அந்த குழிக்குள் பிற கற்கள் போடப்பட்டுள்ளன
தனித்துவமான கற்களின் வடிவமைப்பால் நீண்ட காலத்துக்கு தாங்கும்
கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட இளஞ்சிவப்பு கற்கள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூரிலிருந்து தருவிப்பு
இளஞ்சிவப்பு கற்களின் ஆயுளும் அதிகம்; அழகும் கொண்டது
ராம் லல்லா சிலையை செதுக்க நேபாளத்திலிருந்து ஷாலிகிராம் கற்கள் தருவிப்பு
ஷாலிகிராம் கற்கள் ஆறு கோடி ஆண்டு பழமையானது என தகவல்
சிறப்பு ஏற்பாடுகள்
22 ஆம் தேதி வரும் திங்கள்கிழமை பால ராமர் சிலை நிறுவல்
ஆயிரக்கணக்கான விவிஐபிகள் வர திட்டம்
ரயில் விமான நிலையங்கள் புதுப்பொலிவு பெற்றன
அயோத்தி நகர கட்டிடங்களில் ராமர் உருவம் தாங்கிய காவி கொடிகள்
பிரதான சாலையின் நடுவே ராமாயண கதாபாத்திர உருவச் சிலைகள்
சாலை சந்திப்பில் அலங்கார சின்னங்கள் விளக்குகள்
அயோத்தி நகரில் இருந்து கோவிலுக்கு செல்ல 13 கி.மீ., நீள ராம் பத் சிறப்பு சாலை
ராம்பத் – பக்திபத் – தர்ம பத் – ஜனம் பூமி பத் என 4 பிரதான சாலை
இந்த சாலைகளின் இரு மருங்கு கட்டிடங்களிலும் ஒரே மாதிரியான இளம் மஞ்சள் நிற பெயிண்ட்
ராமாயண புத்தகங்கள் ராமர் அனுமனின் உருவப்படங்கள் சிலைகள் விற்க ஏற்பாடு
எப்போது பணிகள் முடியும்?
ராமர் சிலை கருவறையில் நிறுவப்பட உள்ளது
ஆனால் கட்டிடப் பணிகள் முழுமையாக முடியவில்லை
முதல் இருதளங்கள் டிசம்பர் 2024 ல் தயாராகும்
2025 இல் கோவில் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு விடும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.