கோடை கால அக்குள் வியர்வை நாற்றத்தை எப்படி தடுப்பது?
கோடை காலத்தில் வெளியே சென்று வந்தாலோ, கிச்சனில் இருந்து சமையல் வேலை செய்தாலோ சிலருக்கு குளித்தது போல் வியர்த்துவிடும். இதனால் மீண்டும் குளிக்கச் சென்றுவிடுவார்கள்.
எவ்வளவுதான் வியர்த்தாலும், அக்குள் வியர்வைதான் அதிக துர்நாற்றம் கொடுக்கும். என்னதான் ஸ்பிரே அடித்து மேனேஜ் செய்தாலும், கையை சற்று உயர்த்தினால்கூட, நம் மூக்குக்கே அந்த துர்நாற்றம் எட்டி தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இதனால் யாரிடமும் அலுவல் ரீதியாக சற்று அருகே சென்று பேச முடியாது. எனவே, தயங்கித் தயங்கி ஒதுங்கி நிற்பதும், கூட்டமாக இருக்கும் லிஃப்டில், பேருந்தில் ஏறாமல் தவிர்ப்பதும் கூட உண்டு.
ஏன் வியர்வை நாறுகிறது?
துர்நாற்றம் தரும் வியர்வை என்பது சுரப்பிகளில் இருந்த வெளியேறுவது. அது பாக்டீரியாவுடன் சேர்வதால்தான் இந்த கெட்ட வாடை அடிக்கும்.
இது வழக்கமான சீசனைவிட கோடை காலத்தில்தான் இந்தப் பிரச்னை அதிகமிருக்கும். இவற்றைத் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளைப் பார்க்கலாம்.
தினமும் குளிக்கவும். முடிந்தால் 2 முறை குளிக்கவும்.
அக்குளில் இருக்கும் உரோமத்தை அகற்றவும். குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது அகற்றிடவேண்டும்.
உரோமங்களில் வியர்வைத்துளிகள் படிந்து உப்பாக மாறினாலும், அது உடையில் உப்புப்படிந்ததுபோல் பிரதிபலிக்கும்.
அதுமட்டும் இன்றி அக்குளின் அடியில் உள்ள ஆடையில் வட்ட நிறத்தில் வியர்வை ஈரம் அப்படியே தெரியும். இதுவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.
வழக்கமாகப் பயன்படுத்தும் சோப்புக்கு பதில், கிருமிநாசினி சேர்த்த சோப்பைப் பயன்படுத்தலாம்.
சுக்குடன் கொத்தமல்லி விதைகளை நுணுக்கிப்போட்டு அதைக் காஃபியாக வாரம் இருமுறை குடிக்கலாம்.
குளித்த பிறகு ஈரம் போக நன்கு துடைத்தபின்பே ஆடைகளை அணிய வேண்டும்.
அக்குளில் இறுக்கும் அளவுக்கான ஆடைகளை அணியாமல், சற்று காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணியலாம். அல்லது ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியலாம்.
அக்குளில் கடலை மாவு, பயத்தம் பருப்பு ஆகியவற்றை கொர கொரவென பொடியாக்கி தேய்த்து குளிக்கவும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.