குழந்தைகளை தூங்க வைக்க ரொம்ப கஷ்டப்படுறீங்களா? இதை படிங்க!
குழந்தைகளை உறங்க வைப்பது என்பது அவர்கள் பச்சிளம் குழந்தைகளாக இருக்கும்போது இருந்து தொடங்கக்கூடிய ஒரு பிரச்சனை. ஆனால், சிறு பிள்ளைகள் வயிறு நிறைந்ததும் உறங்கி விடுவார்கள். அவர்கள் பெரும்பாலும் உறங்கிக் கொண்டே தான் இருப்பார்கள்.
அதுவே, அவர்கள் சற்று வளர்ந்ததும் அவர்களை உறங்க வைப்பது என்பது பெற்றோருக்கு சவாலான காரியமாகவே இருக்கும்.
இது குழந்தைகள் தூக்கத்தை முறையாக ஒழுங்கு படுத்தாத பெற்றோர்களுக்கு மட்டுமே சவாலாக இருக்கும். குழந்தைகளின் பாடி பயோ கிளாக் ஐ புரிந்து கொண்டு செயல்படும் பெற்றோருக்கு மிகவும் எளிதாகவே இருக்கும்.
அப்படி உங்கள் குழந்தைகளை எளிதில் உரிய நேரத்தில் உறங்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை டிப்ஸ் ஆக விளங்குகிறது “த காரிகை”.
உறக்க நேரம்
3 முதல் 5 வயது உடைய குழந்தைகளுக்கு பொதுவாக இரவு 10 முதல் 13 மணி நேரம் உறக்கம் தேவை. அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 9-லிருந்து 12 மணி நேரம் உறக்கம் தேவைப்படும்.
எனவே மாலை அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் உறங்க வைப்பது நல்லது.
குழந்தை உறங்கும் முன்பாக அவர்கள் அமைதியான மனநிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
அவர்கள் ஏதேனும் கேட்டு அடம் பிடித்தாலோ அல்லது பெற்றோர் வேறு ஏதேனும் வேலைகளில் பிஸியாக இருந்தாலும் குழந்தை அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பிஸியாக வைத்துக்கொள்ள நினைக்கும்.
ஆனால், பெற்றோர் எவ்வளவு தான் பரபரப்பாக இருந்தாலும் குழந்தை உறங்கும் நேரத்தை மாற்ற வேண்டாம்..
ஒரு வாரத்துக்கு அல்லது ஒரு மாதத்திற்கு ஒரே உறக்க நேரத்தை பின்பற்றும் குழந்தை, அடம்பிடிக்காமல் அந்த நேரத்தில் தானாகவே சென்று உறங்கிவிடும்.
குழந்தைகள் உறங்குவதற்கு முன்பு கேட்ஜெட் பயன்பாட்டை குறைக்கவும்.
அதிலிருந்து எழும் நீல ஒளியானது குழந்தைகளின் கண்களில் பாதிப்பையும் மூளையில் சில விஷுவலின் தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
எனவே, உறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே டிவி, ஸ்மார்ட்போன், டேப் போன்ற சாதனங்களை கொடுக்க வேண்டாம்.
மாலை நேரத்தில் காபி அல்லது இனிப்பு சாப்பிட்டால் குழந்தைகள் உறங்க தாமதம் ஆகும். எனவே, அதனை மாலை நேரத்தில் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.
இரவு நேரத்தில் குழந்தைகள் அமைதியாக இருக்க கதை சொல்வது என்பது அவர்களுக்கு அமைதியான ஒரு மனநிலையை கொடுக்கும்.
உறங்கச் செல்லும் முன் கேட்கக் கூடிய கதைகள் அவர்கள் கனவில் பிரதிபலிக்க கூடும் என்பதால் ஹாரர் ஆன கதைகளை விடுத்து அமைதியான, பாசிட்டிவான கதைகளை சொல்வது நல்லது.
குழந்தைகள் உறக்கத்துக்கு தயாராகி விட்டார்கள் என்பதை குறிக்கும் வகையில் அவர்களுக்கு உறக்கத்தில் அணியக்கூடிய இரவு ஆடைகளையும் பல் துலக்கும் பழக்கத்தையும் செய்து விட வேண்டும். எனவே அந்த ஆடைகளை அணிந்த உடனே குழந்தைகள் தூங்க வேண்டும் என்பதை புரிந்து கொள்வார்கள்.
அரவணைப்பு
ஒரு சில நிமிடங்கள் பெற்றோர் குழந்தைகளிடம் படுத்து அரவணைத்துக் கொண்டாலே அவர்கள் நாம் நிம்மதியான கரங்களில் உறங்குகிறோம் என்று நினைப்பில் எளிதில் உறங்கிப் போவார்கள்.
பொழுதும் இனிதாய் விடியும்.