முன்பெல்லாம், தீபாவளி, பொங்கல், திருவிழாக் காலங்களில் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிக்கப்பட்டது. ஆனால், அது பெரிய வேலையாக மலைப்பாக இருக்கிறது என்பதற்காகவும், செலவையும் நேரத்தையும் மிச்சப்படுத்தவும், அழகுக்காகவும் பல வண்ணங்களில் வீட்டுக்கு பெயின்ட் அடிக்கின்றனர்.

ஆனால், இந்தியாவில் விற்கப்படும் பெயின்ட்களில் ஈயம் என்ற விஷத்தன்மையில் அளவு என்பது, 111 மடங்கு அதிகம் இருப்பதாக அதிர்ச்சிகர ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

வீட்டிற்கு வர்ணம் பூசப்பயன்படுத்தபடும் பெயின்ட்களில் ஈயத்தின் அளவு என்பது, இந்தியாவில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் இருப்பதாக ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்த நஞ்சானது, குழந்தைகளின் மூளையை அவர்களது வாழ்நாள் முழுவதும் பாதிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் NGO தெரிவித்துள்ளது.

டாக்ஸிக்ஸ் லிங்க் (Toxics Link) மற்றும் International Pollutants Elimination Network (IPEN) இணைந்து ஆய்வு மேற்கொண்டது. இதில் 600 க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் (NGO) உள்ளன.

இந்திய கடைகளில் கிடைக்கும் 51 வர்ணங்களில் இந்த ஆபத்து உள்ளது. சிறு குறு நிறுவனங்களைச் சேர்ந்த (MSMIs) 40 பிராண்டுகளைச் சேர்ந்தவை.

இவை நாடு முழுவதிலுமுள்ள கடைகளில் மட்டுமின்றி ஆன்லைனிலும் கிடைக்கிறது.

மத்திய அரசு பரிந்துரைத்த அளவைவிட அதிகமாக Lead (ஈயம்) சேர்க்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஈயத்தின் அளவு என்பது 90 parts per million (ppm). ஆனால் 76.4% பெயிண்ட்களில் இந்த அளவென்பது 111 சதவீதம் அல்ல, 111 மடங்கு அதிகமாக உள்ளதாம்.

Regulation of Lead Contents in Household and Decorative Paints Rules, 2016, படி இவை தடைசெய்யப்பட வேண்டியவை ஆகும்” என்று தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின் தொடக்கமான 2007-ல் முக்கிய பிராண்டுகளும் அளவுக்கு மீறிய ஈயத்தை உள்ளடக்கிய வர்ணங்களை விற்பனை செய்தது. 2017 ல் சட்டம் அமலானபின்பும் இது தொடர்வதுதான் வேதனை.

விளைவு என்னவாகும்?

இந்த லெட் நச்சுத்தன்மை குழந்தைகளின் மூளையை மீளமுடியாத பாதிப்புக்கு ஆளாக்கலாம். பெயின்ட் உரிந்து கீழே விழும்போது அவற்றை குழந்தைகள் தொட்டு விளையாடுவது, எடுத்து உண்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இந்த ஆபத்து அதிகரிக்கும். கால அளவைப் பொறுத்து ஈயம் இரத்த செல்கள், மூளை, சிறுநீரகம், இரைப்பை குடல் மற்றும் கல்லீரலையும் பாதிக்கும்.

உச்சகட்டமாக இந்த லெட்டின் நச்சுத்தன்மை என்பது கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவது என்பது கொடுமையான விஷயம்.

இதனால்தானோ என்னவோ பெரியவர்கள் கர்ப்பிணி வீட்டில் இருக்கும்போது, வீடு மாறக் கூடாது, பெயின்ட் அடிக்கக் கூடாது என சொல்கிறார்களோ? என்னவோ?.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE