ஆர்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பற்றி பெருமையாக பேசி வந்தவர்களில் சிலர், இன்று அதே தொழில்நுட்பத்திடம் தனது வேலையைப் பறிகொடுத்துவிட்டு திண்டாடுகின்றனர். அப்படி மனிதர்களின் உழைப்பில் கைவைத்த ஏஐ என்றால் என்ன என்பதை முதலில் பார்க்கலாம்.

டிஜிட்டல் கம்ப்யூட்டர் வந்ததும் முதலில் தீர்ப்பதற்கு சிரமமான கணக்குகளைப் போடுவது, செஸ் விளையாடுவது போன்ற விஷயங்களைத் தான் செய்தன. ஒரு சில கணக்குகளில் லாகின் செய்யும் போதோ, ஏதேனும் முன்பதிவு செய்யும் போதோ, Am not a Robot என்பதை உறுதி செய்யக் கேட்கும். அப்போது சில புகைப்படங்களைக் கொடுத்து இதில் எத்தனை இடங்களில் கார் உள்ளன? என்றெல்லாம் கேட்கும். ஏனெனில் முந்தைய கணினிகள் தனக்குத் தானே இந்தப் பணியை செய்துவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது வந்துள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறிப்பாக பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் அதிகம் கொண்டது.

ரீசனிங் கண்டுபிடிப்பது, முந்தைய தவறுகளில் இருந்து திருத்திக் கொள்வது, மொழிப்புலமை, புத்திசாலித்தனம், ஒரு பிரச்னையை பல கண்ணோட்டத்தில் அணுகி தீர்வு காண்பது, கட்டுரைகள் எழுதுவது, கதை வடிவமைப்பது, நடனமாடக் கற்றுத் தருவது, புரோகிராமிங் செய்வது என மனிதன் செய்யும் கிட்டத்தட்ட பெரும்பாலான பணிகளைச் செய்துதரும் அளவு முன்னேறிவிட்டது.

என்ன வித்யாசம்?

ஏஐ அல்லாத கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மனிதனின் பணிக்கு கம்ப்யூட்டர் உதவியாக இருந்தது. ஆனால், தற்போது வந்து AI மனிதனின் உழைப்புக்கே மாற்றாக வந்து பல வேலைகளுக்கு ஆப்பு வைத்துள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்தான் சரண்யா.

90% வருமானம் போச்சு

கொல்கத்தாவில் வசித்து வரும் சரண்யா இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பயின்று வருகிறார். அவர் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதி மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து வந்தார். அவரது தாய் புடவைகளை விற்று வந்தார். இதைக் கொண்டு தான் குடும்பச் செலவுகளைப் பார்த்து வந்தனர். ஆனால், கடந்த 2 மாதங்களாக மாதத்துக்கு 1 அல்லது 2 கட்டுரைகள் மட்டுமே கிடைக்கின்றனவாம். எனவே, 90% வருமானமே குறைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சாப்பாட்டுக்கே கஷ்டம்

இதனால் சாப்பாட்டுக்கே கஷ்டம் வந்துவிட்டதாகப் புலம்புகிறார் சரண்யா. தான் தொழில்நுட்பத்துக்கு எதிரானவர் அல்ல என்றும், ஆனால், மனிதர்களின் கற்பனைப் படைப்புக்கு மாற்றாக அந்தத் தரத்துக்கு ஏஐ ஈடுகொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

தான் ஒருவருக்கு மட்டும் இந்த நிலை இல்லை என்றும், இதனால் ஏராளமான கலைஞர்கள் தங்களது பணியை இழந்துவிட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார் சரண்யாவும் அவரது தாயும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE