வாட்டி எடுக்கப் போகும் அக்னி நட்சத்திரம் வெயில்

0

தமிழ்நாட்டில் கத்தரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியிருக்கிறது. இது மே 28ஆம் தேதி வரை நீடிக்கும். ஆனால், கத்தரி வெயில் என்றால் என்ன என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர். இது அவர்களுக்கான தொகுப்பு.

வெயில் காலம் என்றால் என்ன?

நமது நாடு பூகோளத்தில் டிராபிக்கல் பகுதியில் அமைந்திருக்கிறது. அப்படியென்றால், மற்ற நாடுகளில் இருப்பது போன்று நமக்கு நான்கு சீசன்கள் எல்லாம் இல்லை. வெயில் காலம், மழைக்காலம், குளிர்காலம் என்று மூன்று சீசன்கள் மட்டும்தான். அதில், பங்குனி மாதம் முதல் வைகாசி வரை வெயில் காலமாக பார்க்கப்படுகிறது. அதாவது, மார்ச் மத்தியில் இருந்து ஜூன் மத்தி வரை. அதன்பின், மழைக்காலம் தொடங்கிவிடும்.

கத்தரி வெயில் என்றால் என்ன?

நாம் மேலே பார்த்த வெயில் காலம் என்பது பூமியின் சாய்வு சூரியனை நோக்கி திரும்பும்போது ஏற்படுவது. அதாவது, அறிவியல் ரீதியானது. ஆனால், கத்தரி வெயில் என்பது பஞ்சாங்கத்தின் ரீதியிலானது. நமது முன்னோர் இந்த நேரத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்று கணித்து வைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையிலானது. இந்த ஆண்டில், மே 4ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் கொளுத்தும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டிற்கும் வேறுபாடு என்ன?

வெயிலை நாம் அறிவியல் ரீதியில் அணுகினாலும் சரி, பஞ்சாங்க ரீதியில் அணுகினாலும் சரி, அதிலிருந்து விலகியிருப்பது நன்மை தரும். நமது நாட்டில் வெயிலின் தாக்கம் சில நேரங்களில் 45 டிகிரி செல்சியஸை கூட தாண்டும் என்பதால், இந்த நேரங்களில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது சிறந்தது. மற்றபடி, இந்த இரண்டிற்கும் பெரிய வேறுபாடு ஏதும் கிடையாது.

வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி?

நேரடி வெயிலைத் தவிர்க்கவும்:

  • மாலை 10 முதல் பிற்பகல் 4 மணி வரை கடுமையான வெப்பம் இருக்கும். இந்த நேரங்களில் வெளியே போக வேண்டாம்.

சரியான உடைகள் அணியுங்கள்:

  • ஒளிராத மெல்லிய பருத்தி ஆடைகளை உடுத்துங்கள். 

தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்:

  • நாளுக்கு 3–4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்:

  • வெளியே செல்லும் போது SPF 30 அல்லது அதற்கு மேல் உள்ள sunscreen களை முகத்தில், கை கால்களில் தடவவும்.

வெப்பத்தை குறைக்கும் உணவுகள்:

  • தண்ணீர் சத்து உள்ள பழங்கள் (தர்பூசணி, மஸ்க் மெலன், வெந்தய நீர், இளநீர்).
  • தண்ணீர் அதிகம் உள்ள காய்கறிகள் (தக்காளி, வெங்காயம், பீர்க்கங்காய்).
  • மசாலா-heavy, எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் தவிர்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *