2 பேர் இருந்தா சட்டுன்னு அதிரசம் செய்யலாம். .

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1/2 கிலோ

வெல்லம் 1/2 கிலோ

தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய்

ஏலக்காய்த் தூள் சிறிதளவு

செய்வது எப்படி?

முதலில் பச்சரிசியை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, பின் 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

அந்த அரிசியில் இருந்து சொட்டுக் கூட மிச்சமில்லாமல் சாதம் வடிப்பது போல தண்ணீரை மொத்தமாக வடிகட்டவும்

இந்த அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்

அரைத்த அரிசியை சல்லடையில் போட்டு சலித்து எடுக்கவும்.

அதிரசம் செய்ய அரிசி மாவு ரொம்பவும் கொரகொரவென இருக்கக் கூடாது.

மாவை அப்படியே ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு கிண்ணத்தை வைத்து, அதில் 1/2 கிலோ அளவு வெல்லத்தை உடைத்து போடவும்.

கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்றாகக் கரைத்து கொதிக்க விடவும்

5 நிமிடங்கள் வரை வெல்லத்தை பாகு காய்ச்சினால் போதும். பதம் தேவையில்லை.

நன்கு கொதித்தபின், அடுப்பை, மிதமான தீயில் வைத்து விட்டு, வெள்ளத்தை 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

அகலமான பாத்திரத்தில் தயாராக இருக்கும் அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, மர கரண்டி, பருப்பு மத்து போட்டு கலக்கவும்

கஷ்டமாக இருந்தாலும், கட்டி பிடிக்காமல் கலந்து விடுங்கள். அதன் பின்பு மீண்டும் நன்றாக மாவை கலக்கி விடுங்கள்.

வெல்லத்தை ஊற்றி கலக்கும்போது, மாவு தண்ணீர் பதத்தில் தான் இருக்கும்.

இந்த மாவை அப்படியே 8 மணி நேரம் வரை ஆற விடுங்கள்.

மறுநாள் காலை, அகலமான தட்டில் போட்டு, சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து, உருண்டை பிடிக்கவும்.

வாழை இலை இருந்தால் அதில் கொஞ்சம் எண்ணெய் தடவி, அதில் உருண்டைகளை வைத்து தட்டி நடுவில் ஒரு ஓட்டை போடவும்

எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்துக் கொள்ளலாம்.

டிப்ஸ்

ஒருவரால் இந்த அதிரசத்தை செய்து முடித்துவிட முடியாது.

ஒருவர் தட்டிப் போட்டுக் கொண்டே இருக்க, ஒருவர் எண்ணெய் சட்டியில் இருந்து அதிரசத்தை சிவக்க வைத்து எடுக்கலாம்.

கடையில் பச்சரிசி வாங்கும்போது, மாவு பச்சரிசி என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். வெல்லத்திலும் பாகு வெல்லமாக கிடைத்தால் அதிரசத்தின் சுவை கூடுதலாக கிடைக்கும்.

வெல்லத்தில் தூசி இருந்தால், வடிகட்டியில் வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்கள்.

இறுதியாக இந்த மாவில் கால் ஸ்பூன் அளவு சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.ஏலக்காய் தூள் சுக்கு தூள் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

உடனடியாக அதிரச மாவை சூட்டோடு மூடி போட்டு மூடக்கூடாது. கொஞ்ச நேரம் நன்றாக ஆறிய பின்பு மூடி வைத்துக் கொள்ளலாம்.

மாவின் பக்குவம் உங்களுக்கு சரியாகதான் இருக்கும். மாவு ரொம்ப கெட்டியாக இருப்பது போல நீங்கள் உணர்ந்தால், கொஞ்சமாக சுடுதண்ணீரை தெளிப்பு பிசைந்து கொள்ளலாம்.

வாழை இலை இல்லாதவர்கள் பால் கவர் அல்லது ஏதாவது ஒரு கவரை சதுர வடிவில் வெட்டி, அதில் கொஞ்சம் எண்ணையை தடவிக் கொண்டு ஒவ்வொரு அதிரச உருண்டைகளாக எடுத்து தட்டி, சுட்டு எடுக்கலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE