பிக் பாஸ் நிகழ்ச்சி தான் நடிகை வனிதா விஜயகுமாரின் சிறை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது அவருக்கு மீண்டும் ஒரு ஊடக வெளிச்சம் கிடைக்கும் வகையில் அமைந்தது.

பிக் பாஸ் சீசன் மூன்றில் நடிகை வனிதா விஜயகுமார் பங்கேற்றது போன்றே ஏழாவது சீசனில் அவரது மகள் ஜோதிகா விஜயகுமார் பங்கெடுத்து இருக்கிறார் இந்த சீசனில் பிரதீப்பிற்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருந்த போதும் அவர் சக போட்டியாளர்களால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றி வனிதா விஜயகுமாரும் ரிவியூ செய்து வந்த நிலையில், அவர் பிரதிப்புக்கு எதிராக சில கருத்துக்களை கூறி வந்தார்.

இந்த நிலையில் ரிவ்யூக்கான ஷூட்டை முடித்துக்கொண்டு நள்ளிரவில் அவர் தனது காரில் இருந்து இறங்கி சென்ற போது அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டுள்ளார்

இது பற்றிய அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

“நான் இந்த தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன் . பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது தொலைக்காட்சி கேம் ஷோ மட்டுமே. என்னை கொடூரமாக தாக்கியது யார் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். அந்த நபர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் போன்று பேசினார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டு விட்டு என் காரில் இறங்கி நடந்துக் கொண்டிருந்தேன்.

காரை என்னுடைய சகோதரி சௌமியா வீட்டருகே இருட்டான பகுதியில் நிறுத்தியிருந்தேன். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு நபர், ‘ரெட் கார்டா கொடுக்குறீங்க?’ நீ சப்போர்ட் வேற’ என சொல்லிவிட்டு என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இதனால் காயம் ஏற்பட்ட இடத்தில் ரத்தம் வழிந்து பயங்கர வலித்தது.

நள்ளிரவு 1 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின்போது என் அருகில் யாரும் இல்லை. நான் என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில், அவர் இந்தச் சம்பவத்தைப் போலீஸில் தெரிவிக்கும்படி வலியுறுத்தினார்.

ஆனால் நான் அவளிடம், போலீஸில் தெரிவிப்பதிலும், விசாரணையிலும் நம்பிக்கை இழந்து விட்டேன் என்றேன்.

மேலும், காயம் ஏற்பட்ட இடத்தில் முதலுதவி செய்துவிட்டு நான் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன், முடியவில்லை. அந்த நபர் பைத்தியக்காரத்தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு எடுக்கிறேன். டிஸ்டர்ப் ஆன நபர்களை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு அடி தூரத்தில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதில் டிஸ்டர்ப் ஆன என்ற வார்த்தை மூலம் பிரதீப்பை பைத்தியக்காரன் போன்ற ஒரு நொடியில் தான் வனிதா விஜயகுமார் மீண்டும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE