“அமைதியா இருக்க அந்தக்கால நடிகை இல்ல” – மன்சூர் வில்லங்கத்தில் குஷ்பூ நெத்தியடி

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் “த்ரிஷாவுடன் லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது; குஷ்பூ, ரோஜாவை மெத்தையில் போட்டது போல் த்ரிஷாவை தூக்கிப்போட முடியவில்லை. நடிகைகளுடன் ரேப் சீன் இல்லை” என ஆபாசமான முறையில் பேசியிருந்தார்.

“மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்துக்கு வந்துள்ளது. நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன், மேலும் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு மற்றும் மோசமான ரசனையாக நான் காண்கிறேன். அவருடன் சேர்ந்து இனி நடிக்கமாட்டேன். அவர் மனித குலத்துக்கே இழுக்கு” என காட்டமாக பதிலளித்திருந்தார் த்ரிஷா.

நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றியதால், மன்சூர் அலி கான் கூறிய பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு மனமுடைந்து கோபமடைந்தோம். பெண்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு எந்தத் துறையாக இருந்தாலும் அதில் மரியாதை தரப்பட வேண்டும். மன்சூர் அலிகானின் அந்தப் பேச்சை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

இதில் தனது பெயரும் அடிபட்டதால் குஷ்பு வந்து ஒரு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். “ஒரு பெண்ணை அவமதிப்பது அல்லது அவளைப் பற்றி மிகவும் அவமரியாதையாகப் பேசுவது தங்களின் பிறப்புரிமை என்று சில ஆண்கள் நினைக்கிறார்கள். மன்சூர் அலிகானின் சமீபத்திய காணொளி அதற்கு ஒரு உதாரணம். அவரது பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் “சும்மா காமெடிக்கு தான் சொன்னேன்” என்ற அணுகுமுறை அவர்களின் இந்த பேச்சை கவனிக்கப்படாமல் புறக்கணிப்பட்டுவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இல்லை, அவ்வாறு கிடையாது. அவர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பெண் நடிகரிடமும், பொதுவாக பெண்களிடமும் தனது மோசமான, பெண் வெறுப்பு, கீழ்த்தரமான மனநிலையை வெளிப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இன்றைய பெண்கள் தங்கள் மரியாதை மற்றும் கண்ணியத்திற்காக போராடும் அளவுக்கு வலிமையானவர்கள்”

“அவரது தரம் தாழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடே இது. பொது வெளியில் பெண்களை மதிக்கத் தெரியவில்லை. வீட்டிலுள்ள பெண்களை எப்படி மதிப்பார்கள்? இம்மாதிரியான பேச்சுக்களை முன்பு இருந்த நடிகைகள் கண்டிக்காமல் விட்டுவிட்டார்கள். ஆனால், இப்போதைய நடிகைகள் தைரியமாக அதனை வெளியில் கண்டிக்கின்றனர். இது ஆரோக்யமானது. மக்களின் பார்வைக்கு ஏற்ப சினிமாவின் போக்கும் மாறுகிறது. அதனைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

ஆம், அந்தக் காலத்தில் பெண் நடிகைகள் குரல் வளையைத் தாண்டி தங்களுக்கான நியாயமான கோரிக்கைகள் கூட முன்வைக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், இன்றோ, நடிகைகள் சமூக வலைதளங்களைத் தமக்காகப் பயன்படுத்துவதால், சமூகத்தில் அவர்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் ஆதரவு பெருகுகிறது. இது ஒரு ஆரோக்யமான மனப்போக்கு தான். இதனிடையே தான் அரசியலில் போட்டியிடுவதால் எனது பேச்சை வேண்டுமென்றே தவறாக எடிட் செய்து அனுப்பியிருப்பதாகக் கூறியுள்ளார் மன்சூர் அலி கான். அதை தான் விளையாட்டாகத்தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மூத்த மகள் தில்ரூபா த்ரிஷாவின் மிகப்பெரிய ரசிகை என தானே திரிஷாவிடம் கூறியிருப்பதாகவும் விளக்கம் கொடுத்திருக்கிறார் மன்சூர் அலி கான். சக்கு சக்கு ஒட்டிக்கிச்சு, வத்திக் குச்சி பத்திக்கிச்சு அப்டிங்குற மாதிரி இவர் என்ன விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்காமல் அரசியல் கட்சித் தலைவர்களிடம் இருந்து கூட மன்சூரின் பேச்சுக்கு எதிர்ப்புக்குரல் கிளம்பி வருகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE