திரையுலகில் இதுவரை நடந்த விவாகரத்துக்களில் மிகவும் ரகசியமாகவும் கண்ணியமாகவும் நடந்த விவாகரத்துக்களில் நடிகர் ராமராஜன்-நளினி விவாகரத்தும் ஒன்று.

விவகாரத்து பற்றி கேட்ட போது, “தான் மிகவும் மதிக்கும் பெண், என்னுடன் எனக்காக பல ஆண்டுகள் வாழ்ந்தவர். அவர் பெயரையும் புகழையும் கலங்கப்படுத்த விரும்பவில்லை. விவாகரத்துக்கான காரணம் கேட்காதீர்கள்” என பத்திரிக்கையாளரிடம் மிகவும் கண்ணியமாக கூறி விடைபெற்றவர்.

பல ஆண்டுகள் கழித்து நடிகை நளினி விவாகரத்து பற்றி மவுனம் கலைத்து பேசிய வீடியோவின் சாராம்சம் இதோ.

சாக முடிவெடுத்தேன்

“நிச்சயமாக நான் என்னுடைய கணவரை விட்டு பிரியும் போது, என்னால் வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் சாவதற்கான எல்லா முடிவையும் எடுத்து விட்டேன். 2 குழந்தைகளையும் கையோடு அழைத்துச் சென்று விட எண்ணினேன். அப்போதுதான் கிருஷ்ண தாசி என்ற சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. உண்மையில் சின்னத்திரைக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றபோதும் அதற்கு அவர்கள் என்னை பழக்கினார்கள்” என்றார்.

14 வருட திருமண வாழ்க்கை

கிருஷ்ண தாசி சீரியலில் இடம் பெற்ற, மனோன்மணி கேரக்டர் தான் என்னை தைரியமாக வாழ வைத்தது. பெரிய திரையை விட சின்னத்திரையை மிக மிக நேசிக்கிறேன். வாழ்விலேயே நான் மிகவும் ஆசை ஆசையாக சந்தோஷப்பட்டு, செய்து கொண்டது என்னுடைய கல்யாணம்தான். நான் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும், எனக்கு எவ்வளவோ கெட்ட விஷயங்கள் நடந்தது. இருந்தாலும், நான் நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, 14 வருடங்கள் அவருடன் வாழ்ந்தேன்.

விவாகரத்து கேட்டது யார்?

ஆனால், என்னுடைய கணவர் விவாகரத்து கேட்டார். மகளிர் தினமன்று எனக்கு விவாகரத்து கிடைத்தது. அந்த தினம் வாழ்க்கையில் எந்த ஒரு பெண்ணுக்கும் வரவே கூடாது என்று நினைத்திருந்தேன். என்ன கஷ்டமாக இருந்தாலும் ஒருவருடன் தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் நான் இருந்தேன். நான் மதுரைக் கார பெண் வேறு.

அதனால் அந்த முடிவிலிருந்து நான் என்றுமே மாற மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தேன். என்னால், இன்னொருவரோடு வாழ வேண்டும்; வாழ முடியும் என்று நான் நினைத்து பார்த்ததே கிடையாது

அவர் இல்லாமல் நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால்தான் நான் தற்கொலை முடிவுக்கும் வந்தேன். ஆனால் இன்று அவர் முன்னால் நான் தலை நிமிர்ந்து நடந்து கொண்டிருக்கிறேன்.” என்று பேசினார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE