சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமாகி பின் சீரியல்களில் நடித்து வருகிறார் மஹாலட்சுமி. அவரைத் திருமணம் செய்ததன் பிரபலமானவர் ரவீந்தர் சந்திரசேகர். இருவரது உருவ அமைப்பும் சற்றும் ஒத்துப் போகவில்லை எனக் கூறி விமர்சனங்கள் எழுந்தன. உள்நாட்டு மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களும் இதுபற்றி செய்திகள் வெளியிட்டன. இது கொஞ்ச நாளைக்குத் தான் நீடிக்கும் என வந்த விமர்சனங்களுக்கு பதிலடியாக முதலாம் ஆண்டு திருமண நாளை இருவரும் காதலோடு கொண்டாடியதாக அவர்களின் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு இருந்தனர்.

ரவீந்தர் சந்திரசேகர் சினிமா விமர்சனத்துக்காக த ஃபேட்மேன் எனும் பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்னென்னு தெரியுமா? நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

பாலாஜி என்பவர் ரவீந்தர் சந்திரசேகர் மீது காவல்துறையில் ஒரு புகார் அளித்துள்ளார் அதில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரவீந்திர சந்திரசேகர் தனக்கு அறிமுகமானபோது “நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அந்த திட்டத்தின் மதிப்பு 200 கோடி ரூபாய் என்றும் சொன்னார். அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தை கூறினார். தன்னை நம்ப வைப்பதற்காக திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் என்ற பெயரில் புனையப்பட்ட ஆவணங்களை காண்பித்ததை நம்பிவிட்டேன். அதன் பேரில் ரூ.16 கோடி முதலீடு செய்ய வைத்து இழப்பு ஏற்படுத்தி விட்டார்” என தமது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்ட விசாரணையில் பாலாஜியின் புகாரில் இருப்பதாக கூறி மத்திய குற்றப்பிரிவின் ஆவண தடுப்பு பிரிவு குழு ரவீந்தர் சந்திரசேகரை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தது.

ஏற்கெனவே விஜய் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக கொடுத்த புகாரில் “என்னிடம் 20 லட்சம் வாங்கிக் கொண்டு ரவீந்தர் சந்திரசேகர் மோசடி செய்துவிட்டார்” என குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பான வழக்கும் ஏற்கெனவே விசாரணையில் இருந்து வரும் நிலையில் மற்றொரு வழக்கில் ரவீந்திர சேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE