‘படிப்பு முக்யம் பிகிலு‘னு காட்ன நடிகைங்க டிகிரி இதான்

சமீபத்தில் நடிப்பு போதும் படிப்பு எதுக்கு என பேச்சு எல்லாம் பிக் பாஸில் பேச்சாளி பட்டது. இந்த நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் பலரது படிப்பும் கல்வித் தகுதியும் என்னவென்றே பல ரசிகர்களுக்குத் தெரியாது. என்னதான் அவர்கள் புகைப்படத்தை போனில் வால் பேப்பராக வைத்திருந்தாலும்கூட அட நம்மாளு இவ்ளோ படிச்சுருக்காங்களா? இந்த காலேஜ்-ல தான் படிச்சாங்களா? அப்டின்னு ஷாக் ஆகும் அளவுக்கு இந்த செய்தியில் பல தகவல்கள் உள்ளன. எனவே முழுசா படியுங்க.

த்ரிஷா

22 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் த்ரிஷா. இவர் தனது பொன்னியின் செல்வன், லியோ என பெரிய பெரிய பட்ஜெட் படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் “த ரோடு” திரைப்படம் வெளியானது. அது மட்டுமின்றி அடுத்த வாரம் லியோ படமும் வெளியாகிறது. மாடலிங் துறையில் இருந்து, மிஸ் சென்னை போட்டியில் வென்று, சினிமாவில் கால் தடம் பதித்த த்ரிஷா சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ பட்டம் பெற்றவர்.

நயன்தாரா

திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர், ஐயா என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் நடித்த ஜவான் திரைப்படம் வசூலில் ஆயிரம் கோடியை கடந்து சாதனை படைத்து வருகிறது. கேரளாவில் படித்து வளர்ந்த இவர் இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்துள்ளார்.

சமந்தா

சென்னை பெண்ணான சமந்தா பல்லாவரத்தில் வளர்ந்தவர். தமிழில் மாஸ்கோவின் காவேரி என்ற படம் மூலம் அறிமுகமான போதும் தற்போது தமிழ் சினிமாவின் பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் இவர். உடல்நலக் குறைவு காரணமாக வெளிநாடு சுற்றுலா பயணம் செய்து வருகிறார். இவரும் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பிஎஸ்சி படித்தவர்,

ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா தமிழில் கார்த்தி உடன் சுல்தான் படத்தில் அறிமுகமாகினார். வெகு விரைவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் சைக்காலஜி படித்தார். அதனை அடுத்து ஜர்னலிசமும் இங்கிலீஷ்ல லிட்ரேச்சரும் பட்டப்படிப்பாக படித்து உள்ளார்.

நித்யா மேனன்

தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற மலையாள மொழிநாயகி நித்யா மேனன். இவர் “நூற்றென்பது“ என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகினார். விஜய் சூர்யா துல்கர் சல்மான் தனுஷ் நடித்த பல நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இவரும் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் ஜர்னலிசம் படித்தவர் தான்

ஐஸ்வர்யா ராஜேஷ்

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரிகள் பிகாம் படித்தார்

சாய் பல்லவி

மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரேமம் படத்தில் அறிமுகமான நாயகி சாய் பல்லவி.முதல் படத்திலிருந்து இயல்பான நடிப்பும், அசத்தலான நடனமும், அழகான தோற்றமும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது. தற்போது பாலிவுட்டில் உருவாகும் ராமாயண கதையில் சீதையாக களமிறங்குகிறார். இவர் ஜார்ஜியாவில் உள்ள ஒரு மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு பயின்றுள்ளார்.

அதிதி

இயக்குனர் சங்கரின் மகளான அதிதி மருத்துவம் பயின்றவர். இருந்தாலும் தனது விருப்பத்துக்கு ஏற்ப நடிப்பில் களமிறங்கியுள்ளார். கார்த்தி, சிவகார்த்திகேயனின் படத்தில் நடித்த இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE