என் லவ்வர் பிரபுகூட ஜோடியா நடிக்கத்தான் சுயம்வரத்துல நடிக்க ஒத்துக்கிட்டேன் – ஐஸ்வர்யா

நடிகை ஐஸ்வர்யா நடிகை லட்சுமியின் மகள் ஆவார். இவர், தனது முதல் காதல் நடிகர் பிரபுதான். அவரை 16 வயது முதல் காதலிப்பதாகக் கூறியுள்ளார். தனது காதல் பற்றி நடிகர் பிரபுவின் மனைவி புனிதா அக்காவுக்குக் கூட தெரியும் என்றும் மிகவும் ஓப்பனாக பேசியுள்ளார்.

அவரது பேட்டியின் சாராம்சம் இதோ.

எனக்கு சூர்யா எப்பவுமே சரவணன்தான்.

“நடிகர் சிவகுமாரின் படத்தில் நடிக்கத் தொடங்கிய போது அவரது மகன்கள் சூர்யா, கார்த்தியோடு விளையாடுவேன். சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன். அவரை சரவணன் என்றுதான் அழைப்பேன்.” எனக் கூறியுள்ளார்.

1986-ல் பிரபு நடித்த பாலைவன ரோஜாக்கள் படம் வந்தது. அந்தப் படத்தில் நடிகர் பிரபுவைப் பார்த்ததிலிருந்தே நான் அவரைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். அப்போது எனக்கு வயது 16. நடிகைகளுக்குக் கூட நடிகர் பிரபு என்றால் பிரியம்.

அந்தப் படத்தில் நடிகர் பிரபுவின் நடிப்பைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போய்விட்டது.

சுயம்வரம் படத்தில் டாய்லட் கழுவும் பெண்மணி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் ஐஸ்வர்யா. அந்தப் படம் ஏராளமான நடிகர் பட்டாளத்தைக் கொண்டு 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு சாதனை படைத்தது. அந்தப் படத்தில் நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஐஸ்வர்யா.

இதுபற்றிப் பேசிய ஐஸ்வர்யா, பிரபு நடிக்கிறார் என்பதால்தான் நான் படத்திலேயே நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆம்பள படத்தில் நடிகர் விஷால், பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்போது கூட நான் நடிகர் பிரபுவை சைட்டடித்தேன்” எனக் கூறியுள்ளார்.

நடிகர் பிரபு சிவாஜியின் மகன் மட்டுமின்றி குழிவிழும் கன்னத்தின் புன்னகைக்குச் சொந்தமான கொழுக்கு மொழுக்கு நடிகர். அவர் மிகவும் அழகாக இருந்தார். நடிகைகளுக்கே பிரபுவைப் பார்த்தால் ஒரு மாதிரி ஆகிவிடும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர்களைப் பார்த்து காதலிப்பது எனக் கூறுவது பல பெண்களுக்கும் வரும் ஒரு பருவ உணர்வுதான். அதையேதான் நடிகை ஐஸ்வர்யாவும் வெளிப்படையாக மனம் விட்டுக் கூறியுள்ளார்.

ரோஜா படத்தில் தான் நடித்திருக்க வேண்டியது, அதை மிஸ் செய்துவிட்டேன் என்றும் அந்தப் பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

உங்களுக்கு நடிகர் பிரபுவின் நடிப்பில் பிடித்த திரைப்படம் எது என்பதை கமென்ட் செக்ஷனில் சொல்லுங்க பாக்கலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE