“பிரேம்ஜிக்கு பொண்ணே கொடுத்து இருக்க கூடாது”- மாமியார்

நான் எப்பவுமே முரட்டு சிங்கிள் என சுற்றிக் கொண்டிருந்த பிரேம்ஜிக்கு சமீபத்தில் திருமணம் ஆனது அவரது சக சிங்கிள் பசங்களுக்கு கடுப்பாக இருந்தாலும் பலரும் மனதார வாழ்த்தினர்.

பிரேம்ஜி மனைவியின் குடும்பப் பின்னணி

மணப்பெண் சினிமாத்துறை சார்ந்தவர் அல்ல. சேலத்தில் ஆண்டாண்டு காலமாக கூட்டு குடும்பமாக வசிக்கும் மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர்.

மணமகள் இந்துவின் தாயார் ஷர்மிளா திறமையான தொழிலதிபர். அவர் பல சிரமங்களுக்கு மத்தியில் இந்துவை வளர்த்து ஆளாக்கி இருக்கிறார்.

எப்புட்ரா. . ?

இந்துவுக்கும் பிரேம்ஜிக்கும் மிகவும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் நிலையில் இவருக்கு எப்படி பெண் கொடுத்தார்கள் என்று பலரும் கமெண்ட்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது அதேபோன்ற ஒரு பதிலை தான் பிரேம்ஜியின் மாமியார் ஷர்மிளாவும் கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

“பொண்ணு கொடுத்திருக்கக் கூடாது

சொல்லப்போனால் பிரேம்ஜிக்கு பொண்ணே கொடுத்திருக்க கூடாது என்று அவர் கூறியதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

“முதலில் நாங்கள் பிரேம்ஜியை மருமகனாக ஏற்கும் முன்பு பலவும் யோசித்தோம்.

அவரைப் பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் பேசிய பேட்டிகள் ஆகியவற்றைப் பார்த்து அவரை தப்பாக எடை போட்டு விட்டோம்.

“தங்கமான மருமகன் பிரேம்ஜி”

ஆனால், பழகிப் பார்த்த பின்பு தான் தெரிகிறது பிரேம்ஜி மிகவும் தங்கமான மனிதர் என்று.

நான் என் மகளின் வீட்டுக்கு சென்றால் கூட,ஏதேனும் வேலை செய்தால் அவரை எதற்காக வேலை வாங்குகிறாய் என்று என் மகளிடம் பிரேம்ஜி கடிந்து கொள்கிறார்.

பெரியவர்களை மதிப்பவர்”

பிரேம்ஜி பெரியவர்களை மிகவும் மரியாதையுடன் நடத்தும் குணம் கொண்டவர் என்று அவருடன் பழகிய பின்பே தெரிகிறது

பிரேம்ஜிக்கு எங்கள் வீடு ரொம்ப பிடிக்கும். எங்கள் வீட்டு ஆட்களும் எங்கள் வீட்டு சமையலும் பிரேம்ஜிக்கு மிகவும் விருப்பம்.
நாங்கள் கூட்டுக் குடும்பமாக மிகப்பெரிய உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமாக வசித்து வருகிறோம்.

எனவே எங்கள் வீடுகளுக்கு மசாலா பாக்கெட்டுகள் நாங்கள் கடைகளில் வாங்குவதில்லை. நாங்களே சொந்தமாக மசாலாக்களை தயாரித்து குழம்புகளில் பயன்படுத்தும் போது அதன் ருசியே தனியாக இருக்கும். இதை எங்கள் மாமியார் எங்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்.

பிரேம்ஜியின் பிசினஸ் ஐடியா

இதைப் பார்த்து மிகவும் பாராட்டிய பிரேம்ஜி இதை நீங்கள் ஏன் ஒரு பிசினஸ் ஆக செய்யக்கூடாது என்று ஐடியா கொடுத்தார்.

எனவே அவரது பெயரிலேயே பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா என்ற பெயரில் நாங்கள் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கியுள்ளோம்.

அதன் மூலம் மசாலாக்களையும் விற்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்..
பிரேம்ஜி கொடுத்த பிசினஸ் ஐடியா என்பதால் பிரேம்ஜியின் பெயரையே மசாலாவுக்கும் வைத்து இணைத்துள்ளோம்.”

என்று தனது புதிய மருமகன் பற்றி மிகவும் பெருமையாக பேசியிருக்கிறார் இந்துவின் தாய் ஷர்மிளா.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE