நடிகர் சிவகுமார், தமிழ் திரை உலகில் ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிளும் நடித்தவர். வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நடிகர் சிவகுமார் இவர் தனது 100-வது படத்தின் போது 1979 ஆம் ஆண்டு கல்வி அறக்கட்டளை தொடங்கினார். இதை அடுத்து தனது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோருடன் இணைந்து அகரம் அறக்கட்டளையும் நடத்தி ஏழை எளிய குழந்தைகளுக்கு தரமான கல்வியை இலவசமாக வழங்கி வருகிறார்.

சிவகுமார் ஸ்கூல் ஃபீஸ்

இந்த அகரம் அறக்கட்டளையின் சார்பில் 44ஆவது விருது வழங்கும் விழா நடைபெற்றது அதில் கலந்து கொண்டு நடிகர் சிவக்குமார் சில நிமிடங்கள் உரையாற்றினார் அப்போது பேசுகையில் “என் அம்மா சொந்த நிலத்தில் வேலை பார்த்தாங்க, என் அக்காவோட படிப்ப நிறுத்தி என்ன படிக்க வச்சாங்க. 6,7,8-ம் வகுப்பு படிக்கும் போது ரூ.2.25 தான் கட்டணம். 9,10 வகுப்புக்கு ரூ.5.25 ரூபாய்தான் கட்டணம். ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படிச்சப்ப மொத்த செலவை ரூ.850 ரூபா தான். என்றார்.

சிவகுமார் ஆதங்கம்

“ஆனால், என் பையன் கார்த்தி ஓட மகள் ப்ரீக்கேஜ் படிக்கிறாள். எல்கேஜி இல்லை யுகேஜி இல்லை ப்ரீ கேஜி தான். அங்க பாடம் எல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டாங்க. ஒன்னுக்கு ரெண்டுக்கு போவாங்க. அவ்ளோதான். அதுக்கு ரூ.2.50 லட்சம் செலவாகுது. அடப்பாவிங்களா நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா?” என்று ஆவேசத்துடன் பேசினாராம்.

புகைப்படம் எடுக்க காசில்ல

“என் அம்மாகிட்ட போய் பத்தாம் வகுப்பு படிக்கிறதுக்கு ரூ.5.25 கட்டணம் கேட்டேன். உடனே முந்தானைல முடிஞ்சு வச்சிருந்த காசை எடுத்துக் கொடுத்தாங்க. அதே மாதிரி கொஞ்ச நாள் கழிச்சு மறுபடியும் அம்மாகிட்ட போயி ரூ.11.25 கட்டணம் கேட்டேன். எதுக்குடான்னு கேட்டாங்க? பொது தேர்வு கட்டணம் எழுதணும் அப்படின்னு சொல்லி கேட்டேன். சரின்னு கொடுத்தாங்க. அதுக்கப்புறம் மறுபடியும் அம்மாவிடம் போய் தலைய சொரிஞ்சேன். இப்ப என்னடா வேணும் அப்படின்னு சொல்லி கேட்டாங்க ?பத்தாம் வகுப்பு முடிக்க போறதால நண்பர்கள், வாத்தியார்கள், தலைமை ஆசிரியர்களோடு சேர்ந்து போட்டோ எடுத்துக்கணுமா, அதுக்கு ரூ.5 ஸ்கூல்ல கேக்குறாங்க அப்படின்னு சொல்லி கேட்டாங்கன்னு கேட்டேன். கொன்னேபுடுவேன். ஓடீடுன்னாங்க.

ஸ்கூலுக்கு போனேன் எல்லா மாணவர்களும் புகைப்படம் எடுக்க தயாரானாங்க. ஆனா, நான் மட்டும் வீட்டுக்கு கிளம்பினதை பார்த்து ஒரு மாணவன் என்னை அழைச்சு நீயும் வா புகைப்படம் எடுக்கலாம், பணம் இல்லன்னா என்ன வா அப்படின்னு சொன்னான். ஆனா தன்மான இடம் கொடுக்காததால கிளம்பி வந்துட்டேன்.

எத்தன படம் நடிச்சாலும் ரூ.5 போட்டோல இல்ல

“அந்த புகைப்படத்தில் என்னால நிக்க முடியல அப்படிங்கற ஆதங்கமும் எனக்கு ரொம்ப நாள் இருந்தது. 150 படம் நடிச்சிருக்கேன், 4 கோடி ரீல்ல என் முகம் இருக்கு. ஆனா அஞ்சு ரூபா புகைப்படத்தில் என் முகம் இல்லை என்கிற ஆதங்கம் எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. அதுக்கப்புறம் ஒரு தனியார் தொலைக்காட்சியோட ஏற்பாட்டில் ஸ்கூல்ல தேடி கண்டுபிடித்து என்னோட படிச்ச மாணவ, மாணவிகள், ஆசிரியர்களோட புகைப்படம் எடுத்துக்கிட்டேன். பழைய நினைவுகள் ரொம்ப நல்லாவே இருந்துச்சு என்றார்” சிவக்குமார்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE