மச்சினி மறுத்ததால தானே களம் இறங்குன தனுஷ். .
நடிகர் தனுஷ், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே இவர் நடித்த கேப்டன் மில்லர் படம் திரைக்கு வருகிறது. அது மட்டும் இன்றி அடுத்த ஒரு படத்தில் கதை எழுதி அவரே நடிக்கவும் செய்கிறார். இந்த நிலையில் தான் தனுஷ் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் அப்டேட் ஒன்று கசிந்து உள்ளது.
அதன்படி இந்த படத்தில் தனுஷின் மச்சினி சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் இயக்க இருப்பதாக முதலில் முடிவாகி இருக்கிறது. ஆனால் தனுஷ் தனது மனைவியை பிரிந்ததை அடுத்து இந்த படம் சௌந்தர்யா ரஜினிகாந்த்தால் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் கதை எழுதிய தனுஷ் அதற்கான இயக்கும் பணியை சௌந்தர்யா ரஜினிகாந்த் இடம் ஏற்கனவே கொடுத்திருந்ததாகவும், ஆனால் தனுஷ் லீட் ரோலில் நடிப்பது போக மீதமுள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க முடியாமல் காலதாமதம் ஆனதால் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை ஹோல்டில் வைத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்தே, வேலையில்லா பட்டதாரி பாகம் 2ஐ தனுஷ் மும்முரமாக கையில் எடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிந்த பின்பு சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே த இந்து பத்திரிக்கைக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் தனது இயக்குனர் பணியை பற்றி பேசியிருந்தது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் இந்தப் படத்தை தனுஷ் முழுக்க முழுக்க தானே இயக்கப் போவதாக முடிவு எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் வேறு யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவலும் கசிந்துள்ளது. அதன்படி தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது போக அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், ரம்யா ரங்கநாதன், ரபியா காட்டுன், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இது ஒரு ரொமாண்டிக் ஃபிலிம் ஆக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு தனுஷ் லிரிக்ஸ் எழுதியிருப்பதாகவும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைப்பதாகவும் சொல்லப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிகவும் அட்ராக்டிவ் ஆக இருக்க முக்கியமான கதாபாத்திரங்களை அதில் தனுஷ் பொருத்தி வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து தனுஷ் தனது ஐம்பதாவது படத்தையும் தானே இயக்க உள்ளதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.