இங்கிலாந்தில் இருந்து ஒரு வாரம் துருக்கிக்கு சுற்றுலா சென்று திரும்பி குடும்பத்தினர் மகிழ்ச்சியான நினைவுகளை சுமந்து வந்திருந்ததாக நினைத்தனர். ஆனால் வீடு திரும்பி ஒரு வாரத்துக்கு பின் தனது மகளின் கையில் இருந்து வெடிப்பும் ரத்தமுமாக வலிந்ததால் அதிர்ந்து போனார் தாய்.

கிறிஸ்டின் நியூட்டன் என்ற அவர் இது குறித்து பேஸ்புக்கில் தனது ஆதங்கத்தை வகைப்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மடில்டா என்ற தனது 7 வயது மகள் தனது கையில் பட்டாம்பூச்சி போன்ற வடிவில் மருதாணியால் தற்காலிக டாட்டூ போட்டுக் கொண்டதாக கூறினார்.

ஏதோ துருக்கியில் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் போடப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவளது கையில் பட்டாம்பூச்சி போன்ற வடிவில் கெமிக்கல் பர்ன் ஆகியிருப்பதை சுட்டிக்காட்டினார். அதைப் போட்டுக் கொண்ட போது இது தனக்கு அழகான நினைவாக இருக்கும் என தனது மகள் கூறியதாகவும் ஆனால் அது ஒரு மோசமான விளைவாக மாறிவிட்டதாகவும் கூறினார். மருதாணி போட்டு கொண்ட போது முழுவதும் நன்றாகவே இருந்ததாகவும், ஒரு வாரத்துக்கு பின் தான் அலர்ஜி அறிகுறியே தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார். எனவே குழந்தைகள் ஹென்னா டாட்டூவை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கருப்பு நிறம் எக்ஸ்ட்ரா பிக்மெண்டுக்காக பி ஃபெனிலென்டியமின் என்ற PPD வேதிப்பொருள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். இது அடர் நிறம் உள்ள கருப்பு போன்ற டை பயன்படுத்தி மருதாணியில் கலக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதை அடுத்து அந்த இடத்தில் தடிப்பு, அரிப்பு, வெடிப்பு, ரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுத்தி இருந்தது. இதை அடுத்து டாபிகல் ஸ்டீராய்டு, ஆன்டிபயாட்டிக் கிரீம் ஆகியவை கொடுத்தும் அலர்ஜிக்கான மாத்திரைகள் கொடுத்தும் சரி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அனைத்து நாடுகளிலும் இங்கிலாந்து போன்று கெமிக்கல் விதிகள் கண்டிப்போடு பின்பற்றப்படுவதில்லை என்றும் மருத்தவர்கள் அவரை எச்சரித்துள்ளனர்.

மருதாணி என்பது மரத்திலிருந்து பறிக்கப்படும் இலையாகும். இலையை மையமாக வைத்த டை என்பதால் இது இயற்கையாகவே கருதப்படுகிறது. ஆனால் இதில் பல்வேறு வண்ணங்கள் வேண்டும் என்பதற்காக பழ கெமிக்கல்களையும் கலக்குகின்றனர். உடலில் வண்ண வண்ணமாக வரையவும் முடியை நிறமாற்றவும் தோல் கை, கால் நகங்களின் நிறத்தை இயற்கையாகவே மாற்றவும் இந்த மருதாணி பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி தோல், கம்பளி, பட்டு போன்ற பேப்ரிக்குகளிலும் இயற்கை நிறமியாக இந்த மருதாணி சேர்க்கப்படுகிறது.

திருமணத்தின் போது பலரும் கருப்பும் சிவப்பு என பல நிறத்தில் மருதாணியை வைத்துக் கொள்கின்றனர். ஆனால் அதில் சிவப்பு நிறம் பெரும்பாலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் கருப்பு நிற மருதாணி அவர்களுக்கு தழும்பாகவோ தடிப்பாகவோ மாறி அலர்ஜியை ஏற்படுத்த கூடும். எனவே முதலில் கையிலோ காலிலோ ஏதேனும் ஒரு இடத்தில் அந்த மருதாணியை போட்டு பார்த்து சில மணி நேரங்கள் கழித்து அலர்ஜி ஏதும் வருகிறதா? அரிப்பு ஏதும் வருகிறதா? என்று பார்த்த பின்பே முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக மணப்பெண்கள் கருப்பு நிற மருதாணியை பயன்படுத்திவிட்டு ஓரிரு நாட்களில் சோரியாசிஸ் வந்தது போல் சொரிந்து கொண்டிருப்பதை பலரும் அனுபவித்திருக்கலாம். புதிதாகச் சென்ற வீட்டில் உள்ளோரும், அங்கு வரும் உறவினர்களும் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என சங்கடமும் இருக்கும். எனவே இந்த எச்சரிக்கை பதிவை மருதாணியை விரும்பும் பெண்களுக்கும் அல்லது திருமணமாக போகும் பெண்களுக்கும் அனுப்பி வைத்து எச்சரியுங்கள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE