ஆமையுமில்ல, தவளையுமில்ல. ஆனா, ஏன் ஆமைவடை, தவள வடைன்னு சொல்றாங்க தெரியுமா?

வடையில்லாமல் முடியாது அசைவ விருந்து. அப்படிப்பட்ட வடையில் பல வெரைட்டிகளைச் சுட்டு வயிற்றை நப்புவோமே தவிர நாம் அதைப்பற்றியெல்லாம் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், ஆமை வடை சாப்பிடு, மெது வடை சாப்பிடு. தவள வடை சாப்பிட்றியான்கு கேக்கும்போதெல்லாம் வடையச் சாப்பிட்டே வந்ததுதான் இந்த டவுட். இதோட பெயர்க்காரணம் தெரியனுமே என வந்த யோசனையில் நெட்டில் தட்டித் தேடிக் கிட்டிய வடை. . சாரி சாரி . . விடை தான். இது.

வடை

எண்ணெயில் வறுத்து எடுப்பதால் வந்த பெயர் – வறை! பின் வறுவல், வறுக்கி, வற்றல் என மாறி மாறி தற்போது வடை ஆயிற்று.

பார்க்க எப்படியிருக்கும்?

எண்ணெயில் போட்டு எடுத்ததும் மேற்புறத்தில் மொறுமொறுப்பாகவும், உட்புறத்தில் மிருதுவாகவும் இருப்பதே இதன் சிறப்பம்சம்.

வகைவகையான வடை வகைகள்

மெது வடை

மசால் வடை

அரிசி வடை

ஜவ்வரிசி வடை

ரவை வடை

கீரை வடை

வாழைப்பூ வடை

தயிர் வடை

சாம்பார் வடை

ரச வடை

மிளகு வடை

தவல வடை

ஆம வடை

அவற்றில் பிரபலமான மெதுவடையும், மசால் வடையும் தான் பலருக்கும் நன்கு தெரிந்த ஒன்று.

ஆம வடை

மசித்த பருப்பு கொண்டு செய்யப்படும் மசால் வடையைத்தான் பலரும் ஆம வடை எனச் சொல்கின்றனர்.

பெரும்பாலும் உளுத்தம் பருப்பையும், கடலைப் பருப்பையும் வைத்தேதான் வடைகள் செய்யப்படும்.

அவற்றை ஊறவைத்து புளிக்க வைத்து செய்தால் அது ஆம வடை எனப்படுகிறது.

ஆமைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! ஆனால் பழந்தமிழில் ஆமம் என்றால் அது புளிப்புச் சுவையைக் குறிக்கும்.

ஆமம், அமலை என்றால் புளிப்பான சோறு

ஆம்பலம், ஆமலம் என்றால் புளிப்பான அமிலம்

ஆமலகம் என்றால் நெல்லி, புளி போன்ற அமிலச்சுவை கொண்ட கனிகள்

ஆமலகம் என்ற பழந்தமிழ் சொல்லே ஆங்கிலத்தில் ஆம்லா ஆனது.

தவல வடை

தவல வடையிலும் தவளை இருக்காது. தவளைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

வெண்கலத் தவலையின் உள்பக்கமாகத் தட்டி போட்டு எடுத்ததால் அதன் பெயர் தவல அடையாகும்.

முற்காலத்தில் தவலவடையாகத் தட்டப்பட்டு சமைக்கப்பட்டது.

பின் வெண்கலப் பானை இல்லாதது, அடை செய்யக் கடினமாக இருக்கும் காரணமாக எண்ணையில் பொறித்து எடுத்துவிட்டனர். எனவே தவல அடை தவல வடையானது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.