இந்த விஷயம் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது.. உஷார்!
நீங்கள் செய்யும் ஒரே ஒரு விஷயம் உங்களுக்கு மாரடைப்பு, உடல் பருமன், சர்க்கரை வியாதி, பக்கவாதம், இள வயதில் மரணம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. அது என்னவென்று தெரிந்துகொள்ள செய்தியை முழுவதுமாக படியுங்கள்.

நம்மை மெல்ல கொல்வது எது?
இன்றைய நவீன உலகில் பெரும்பாலான பணிகள் நீண்ட நேரம் அமர்ந்து செய்யும் வகையில் உள்ளன. அந்த விஷயம்தான் மேலே சொன்ன இத்தனை வியாதிகளுக்கும் காரணம் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். எவர் ஒருவர் நீண்ட நேரம் உடல் உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறாரோ, அவருக்கு இந்த நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

என்ன செய்ய வேண்டும்?
எவராக இருந்தாலும் குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரங்கள் (150 நிமிடங்கள்) உடல் உழைப்பு இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அது வீட்டு வேலைகளாக கூட இருக்கலாம். அல்லது ஜிம்முக்கு செல்வது, சைக்கிள் ஓட்டுவது, ஜாகிங், நடைபயிற்சி என்று எந்தவிதமான ஆக்டிவிட்டியாக கூட இருக்கலாம். இப்படி செய்வது உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து இளவயது மரணங்களை தடுக்க வழி வகுக்கும்.

வேறு என்ன சிக்கல்கள் ஏற்படும்?
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவது மட்டுமல்லாமல், மன ரீதியான சிக்கல்களும் ஏற்படுகின்றன. வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு, அது தொடர்பான வியாதிகளும் இவர்களுக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதே ஒருவர், அவ்வப்போது ஓய்வு எடுத்து வேலை செய்யும்போது மன அழுத்தம் குறைவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

நீண்ட காலத்திற்கு வாழலாம்
அனைவருமே கண்டு பயப்படும் ஹார்ட் அட்டாக், உடல் பருமன், சர்க்கரை வியாதி இவை அனைத்தும் வருவதற்கு ஒரே ஒரு காரணம்தான் என்பது இப்போது விளங்குகிறதா? நீங்கள் என்ன வேலை செய்தாலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு 10 நிமிடங்கள் இடைவெளி எடுத்துக் கொண்டு நடந்து பழங்குங்கள். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10,000 ஸ்டெப்ஸ்கள் நடக்க முயற்சி செய்யுங்கள். 100 வயது வரை மகிழ்ச்சியாக வாழலாம்.