₹10 லட்சம் உடனடி லோன் வேணுமா? ஈசி டிப்ஸ்

0

நமது அன்றாட, அவசர தேவைகளுக்குதான் நாம் லோன் வாங்குவோம். ஆனால், அதற்கான நடைமுறை நாளுக்கு நாள் எளிமையாகிக் கொண்டே வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீங்கள் பயன்படுத்தும் GPay செயலி உங்களுக்கு ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதை எப்படி வாங்குவது என்று படிப்படியாக தெரிந்து கொள்ளலாம்.

Google Pay Loan: தகுதி, கால அளவு, மற்றும் பிற விவரங்கள்

Google Pay கடன் தொகை:

செயலியில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் கடன்கள் ₹30,000 முதல் ₹10 லட்சம் வரை வழங்கப்படும்.

வட்டி விகிதம் (Interest Rate):

Google Pay தளத்தில் வழங்கப்பட்ட தகவலின்படி, வட்டி விகிதம் வருடத்திற்கு குறைந்தபட்சம் 11.25% என்ற அளவில் தொடங்குகிறது.

கடன் கால அளவு (Tenure):

கடன் வழங்கப்படும் கால அளவு 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கும்.

மாத தவணை (EMI):

கடனுக்கான மாத தவணை ₹2,000 முதல் தொடங்கும்.

வயது வரம்பு (Age Limit):

கடனுக்கு தகுதியான நபர் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும், நிரந்தர வருமானம் உள்ள நபராக இருக்க வேண்டும்.

கடன் திருப்பிச் செலுத்துதல் (Repayment):

Google Pay வாயிலாக பெறப்படும் கடனுக்கான EMI உங்கள் வங்கி கணக்கிலிருந்து நேரடியாக பிடித்தம் செய்யப்படும். கணக்கில் போதுமான இருப்பு இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

Google Pay Loan: எப்படி விண்ணப்பிக்கலாம்?

Step 1: Google Pay செயலியை திறக்கவும்.

Step 2: கீழே உள்ள ‘Manage your Money’ பகுதியில் Personal Loanஐ Apply செய்யவும்.

Step 3: Apply Now என்பதைக் கிளிக் செய்து உங்கள் விவரங்களை உள்ளிடவும்.

Step 4: KYC ஆவணங்களை அப்லோடு செய்யவும், கடன் ஒப்பந்தத்தில் e-sign செய்யவும்.

Step 5: கடன் ஒப்புதல் கிடைத்தவுடன், தொகை நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *