சர்க்கரை நோயின் 6 சைலண்ட் அறிகுறிகள்

0

இந்தியாவில் வயோதிகர்கள் தவிர்க்க முடியாத நோயாக சர்க்கரை நோய் மாறி வருகிறது. அதையும் தாண்டி, சிறியவர்கள் கூட இக்காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர். அந்த சர்க்கரை நோய் வருவதற்கு முன்பே கண்டறிய 6 எளிய வழிகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் உணர்வு, சர்க்கரை நோயின் அரம்ப கால அறிகுறியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருப்பது, ரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பதை குறிக்கலாம்.

அதிக நீர் தாகம்

அவ்வப்போது தண்ணீர் குடிக்கத் தூண்டும் உணர்வு சர்க்கரை நோயின் ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம். உடல் அதிக தண்ணீரை எடுத்துக் கொண்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை வெளியேற்ற முயற்சி செய்வதன் காரணமாகவே இது நடக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான், அதிகளவில் சிறுநீர் வெளியேறுதலும் நடைபெறுகிறது.

மீண்டும் மீண்டும் பசி எடுப்பது

சாப்பிட்டு முடித்த உடனேயே பசி எடுப்பது கூட சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். நமது வயிற்றில் தேவையான அளவு உணவு இருக்கிறது என்பதை இன்சுலின்தான் நமது மூளைக்கு தெரிவிக்கும். சர்க்கரை நோய் காரணமாக இன்சுலின் சுரப்பது குறைந்துவிட்டால், பசி எடுத்துக் கொண்டே இருக்கும்.

அயர்ச்சி மற்றும் சோர்வு

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சக்தியாக மாற்ற முடியாமல் உடல் சிரமப்படும். இதனால், தசைகள் வேலை செய்ய முடியாமல் சிரமப்பட்டு சோர்வை ஏற்படுத்தும். அவ்வப்போது தூக்கம் வருவது, படுத்தே இருக்க வேண்டும் என்பது போல தோன்றுவது ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

பாதத்தில் உணர்வு செயலிழத்தல்

உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் ஊசி வைத்து குத்துவது போன்ற உணர்வு அல்லது சுரணை இல்லாத உணர்வு ஆகியவை சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதிக ரத்த சர்க்கரை நரம்புகளை செயலிழக்கச் செய்து உணர்ச்சியை காலி செய்துவிடும்.

கண் பார்வையில் கோளாறு

ரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பது கண் விழித்திறனை பாதிக்கும். ரத்தம் நேரடியாக கண்களில் உள்ள லென்ஸ்களை பாதிப்பதால், கண் பார்வை மங்களாக தெரிய ஆரம்பிக்கும். இது கூட சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

இத்தகைய அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனடியாக மருத்துவருடன் ஆலோசனை செய்யுங்கள். அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *