“நான் ரொம்ப கெட்டவன்” உண்மையை சொன்ன அரவிந்த் சாமி

ரோஜா, பாம்பே உள்ளிட்ட படங்களில் நடித்து அழகான ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அதற்கு ஒரு இலக்கணமாக அமைந்தவர் அரவிந்த்சாமி.

“உனக்கு அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேணுமோ?” என்று பெண் பிள்ளைகளை கிண்டல் செய்யும் அளவுக்கு மாப்பிள்ளை என்றால் அந்த அழகுக்கு அரவிந்த்சாமி தான் சரியான ஆள் என்று சமூகத்தில் ஒரு எழுதப்படாத சொற்றொடரே உள்ளது.

அரவிந்த்சாமியின் பின்னணி

இவர் மெட்டிஒலி நாடகத்தில் தந்தை கதாபாத்திரத்தில் வந்த டெல்லி குமாரின் மகன் என்றும் பிறந்தவுடனே டெல்லி குமாரின் அக்காவுக்கு தத்து கொடுக்கப்பட்டவர் என்றும் கூட சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகின.

தத்துக் கொடுக்கப்பட்ட குடும்பத்திலேயே வளர்ந்த அரவிந்த்சாமி, எப்போதாவது தான் அதுவும் ஏதாவது ஒரு விசேஷத்துக்கு மட்டும்தான் தனது பிறந்த வீட்டுக்கு சென்று வருவதாகவும் சொல்லப்பட்டது.

நடிப்புக்கு பிரேக்

90களில் ஆஸ்தான நாயகனாக இருந்த அரவிந்த்சாமி தனது நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுத்திருந்தார். அவர் எந்தவித திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் தான் தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி சாக்லேட் ஹீரோ போன்ற பிம்பத்தில் இருந்து உடைந்து தனக்குள் இருக்கும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்தினார் அரவிந்த்சாமி.

மெய்யழகன்

96 திரைப்படம் எடுத்திருந்த இயக்குனரின் இயக்கத்தில் கார்த்தி, திவ்யா, அரவிந்த்சாமி நடிப்பில் சூர்யா, ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் மெய்யழகன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இதன் ப்ரீ ரிலீஸ் ஷோ ஆனது சென்னையில் ஒரு ஷாப்பிங் மாலில் நடைபெற்றது.

ஜனரஞ்சகமாக பேசிய அரவிந்த்சாமி

மெய்யழகன் திரைப்பட நிகழ்ச்சிகளின் போது நடிகர் அரவிந்த்சாமி மக்களை கவரும் வகையில் ஜனரஞ்சகமாக பேசினார்.

ஓப்பனா ஒத்துக்கிட்டார்

“என்னைப் பார்த்துட்டு என்னை மாதிரியே மாப்பிள்ளை வேணும்னு நிறைய பேர் சொல்லி பார்த்திருக்கேன். அவங்களுக்கு என்னோட நிஜ வாழ்க்கையை பத்தி தெரியாது என்று நினைப்பேன்.

படத்தின் கதாபாத்திரங்களை வைத்து நான் இப்படித்தான் இருப்பேன் என்று நம்பி விடுகிறார்கள்.

ஆனால், நிஜத்தில் அப்படி இல்லை.

சினிமாவில் ஒரு மேஜிக் இருக்கிறது என்னைப் பற்றி எல்லாம் தெரிந்தால் அப்படி சொல்ல மாட்டீர்கள்.” எனக் கூறினார்.

நடிகர் அரவிந்த்சாமி கேள்வி

“எனக்கு ரசிகர் மன்றம் தொடங்கி என்ன செய்யப் போகிறீர்கள்? இதனால் ரசிகர்களுக்கு என்ன பலன்? நான் சினிமாவை விட்டு விலகி விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? இதுபோன்ற கேள்விகள் எனக்குள் உண்டு. என்னுடைய மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் என்று சொன்னால் நான் அதை ஊக்குவிக்க மாட்டேன். அப்படி இருக்கும்போது என் மகனுக்கு ஒரு அட்வைஸ், ஊரார் மகனுக்கு ஒரு அட்வைஸா?” என்றும் தனது கருத்தை வெளிப்படுத்து இருந்தார் அரவிந்த்சாமி.

Facebook
Instagram
YOUTUBE