நடிகை சுனைனா பிரபல youtuber காலித் அல் அமேரியை நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

அதை மெய்ப்பிக்கும் வகையில் சில ஆதாரங்கள் என சொல்லப்படும் தரவுகளும் கிடைத்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுனைனா 2006 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்தாலும் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் நடித்து பிரபலமானார்.

இதை அடுத்து வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த போதும் மலையாளம், தெலுங்கு மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

‘த இன்ஸ்பெக்டர்’ என்ற வெப் சீரிஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுனைனா.

இவர், பிரபல அரேபிய youtuber காலித் அல் அமெரியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

யார் இந்த காலித்?

துபாயைச் சேர்ந்த பிரபல யுடியூபரான காலித்துக்கு பல மில்லியன் youtube சப்ஸ்கிரைப்ர்கள் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இவரும் இவரது மனைவி சலாமாவும் பல கப்ல் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி அதிக வரவேற்பை பெற்று வந்தனர்.

ஆனால், சமீபத்தில் கடந்த பிப்ரவரி மாதம் காலிதும் சலாமாவும் பிரிவதாக அறிவித்து விவாகரத்தும் பெற்றனர்.

இந்த நிலையில் தான் நடிகை சுனைனாவும் காலித்தும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம் ஆனதை இருவரும் சமூக வலைதளங்களில் அறிவித்த நிலையில் யாருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

காலித் தனது instagram பக்கத்தில் நிச்சயதார்த்தம் ஆன பின்பு எடுத்த ஜோடியின் மோதிரம் அணிந்த விரல்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதேபோல் சுனைனா மோதிரம் அணிவதற்கு முன்பு எடுத்து ஜோடியான கையை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

சுனைனா பதிவிட்ட மற்றொரு புகைப்படத்தில் காலை தனது வருங்கால மனைவிக்கு அணிவித்த வைர மோதிரம் இவருடைய கையில் உள்ளது.

சுனைனாவின் புகைப்படத்தில் காலித் ஹாய் என்று கூற, சுனைனாவும் ஹாய் ஹாய்🙋🏻‍♀️🙋🏻‍♀️😊😊 என இருமுறை கூறி வெட்கத்தோடு புன்னகைக்கும் இமோஜிக்களை பதிவிட்டு இருக்கிறார்.

இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரியும் சமயத்தில் சலாமா லைவில் மிகவும் கோபமாக ரியாக்ட் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே காலித்துக்கும் சலாமாவுக்கும் இரு பிள்ளைகள் இருக்கும் நிலையில் சுனைனா காதலித்து காலிதை தடம் மாற்றியதாக சமூக வலைதளங்களில் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, யூட்யூபர் இர்பானின் திருமணத்துக்கு வந்த காலித், சென்னைக்கு அடிக்கடி வர காரணம் இருப்பதாக சூசகமாக தெரிவித்து இருந்தார். எனவே சலாமாவுக்கு விவாகரத்து நேர, அவர்களது குடும்ப வாழ்க்கையில் சுனைனா வந்ததுதான் காரணமாக இருக்குமோ என்றும் பலரும் கருத்து பதிவிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Facebook
Instagram
YOUTUBE