இவ்வளவு நல்லவரா மைக் மோகன்?
80-களின் ஹீரோக்களில் தவிர்க்க முடியாதவராக வலம் வந்த மோகன் பல திரைப்படங்களில் தொடர்ந்து மைக்கை பிடித்தபடி பாடகராக வந்ததால் அவரை மைக் மோகன் என்று பெயர் வைத்து விட்டனர்.
அவர் நடித்த படங்கள் பல ஹிட் அடித்தன. இதற்கு பாடல்களின் பங்கும் முக்கியத்துவமாக அமைந்தது. எம்ஜிஆர் முதல் எத்தனையோ திரைப்படங்களுக்கு பல நடிகர்களுக்காக பாடுகிற எஸ்.பி.பி கூட எனது பாடல்களுக்கு உயிர் கொடுக்கும் நபர் மோகன் தான் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அப்படி கூட யோசிக்க வைத்த மோகன், சில தவறான படங்களின் தேர்வு காரணமாகவும் மார்க்கெட் அவுட் ஆனார்.
அதன் பிறகு தற்போது ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்த அவர் அந்த படத்தை பிரமோட் செய்யும் வகையில் பல ஊடகங்களிலும் தனது திரை வாழ்க்கை குறித்து பேசி வருகிறார்.
அந்த வகையில் அஞ்சலி படத்திற்காக அவர் கூறிய ஒரு கருத்து தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அஞ்சலி திரைப்பட சர்ச்சை
அஞ்சலி திரைப்படத்தை முதலில் மௌன ராகம் படத்தில் 2வது பார்ட்டாகதான் எடுக்க மணிரத்தினம் திட்டமிட்டு இருந்தார்.
மௌன ராகம் படத்தில் வரும் மோகனும் ரேவதியும் 2-3 குழந்தைகள் பெற்ற பின்பு நடக்கும் கதை தான் அஞ்சலி திரைப்படத்தின் கதை என்று வந்தது.
அதில் மோகனை 3 குழந்தைகளுக்கு அம்மா அப்பாவாக நடிக்கவைக்கத் திட்டமிட்டனர். ஆனால் மணிரத்னம் கதை சொல்லும்போது, மோகனுக்கு அதில் ஒரு இடத்தில் முரண் ஏற்பட்டது.
அஞ்சலி பாப்பாவே மிகவும் மன நலன் குன்றியவர். அவர் ஒரு ஸ்பெஷல் சைல்டாக இருக்கும் போது அவரை வேறு ஒரு அறையில் தனியாக படுக்க வைப்பது எப்படி மணி? இது நமக்கு செட் ஆகாது. நானும் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறேன். உடல் நலம் அற்ற குழந்தையை ஒரு அறையில் தனியே படுக்க வைப்பது என்பது எனக்கு சரிப்பட்டு வராது என்று தோன்றுவதாக கூறியிருக்கிறார் மோகன்.
அதேபோல் மணிரத்தினமும் குழந்தையைப் பற்றிய கதாபாத்திரத்தையும் ரேவதி அந்த படத்தில் குழந்தையோடு அதிக அளவு ஒன்றிப்போகாத கதாபாத்திரத்தையும் வைத்திருந்ததால் அந்தக் கதையின் குறிப்பிட்ட அம்சத்தை மணிரத்தினம் மாற்ற மறுத்துவிட்டாராம்.
இதனால்தான் அஞ்சலி படத்தில் தான் நடிக்க இயலாமல் போனதாக நடிகர் மோகன் பேட்டி அளித்துள்ளார்.
ஆனால், அப்போதைய ஊடகத்தினர் 2-3 குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கவே மோகன் மறுத்துவிட்டதாக கூறியதால் சர்ச்சை எழுந்தது. ஆனால், அப்போது அவர் எதற்குமே விளக்கம் அளிக்காமல் உண்மையான காரணம் தனக்கு தெரியும் என்று நினைத்து விட்டுவிட்டார்.
அவர் நினைத்திருந்தால் அந்த படத்தையும் தனக்கு கிடைக்காத வாய்ப்பையும் மணிரத்னத்தின் கதையையும் வைத்து ஒரு சர்ச்சையே நடத்தி இருக்கலாம்.
ஆனால் அது எதையுமே செய்யாமல் அதன் பின்பும் மணிரத்தினத்துடன் நல்ல நட்பாகவே தொடர்ந்ததாக சுகாசினி உடன் பேசிய பேட்டியில மோகன் கூறியிருக்கிறார்.
இவர் மிகவும் நல்ல மனிதன். ஒரு குழந்தை கதாபாத்திரமாக இருந்தால் கூட அந்த குழந்தை சிரமப்படக்கூடாது என்று நினைக்கிறார். இவரை தமிழ் சினிமா ரொம்ப நாள் மிஸ் பண்ணி விட்டது என்று தற்போது இணையத்தில் அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது.
சில நடிகர்களுக்கு அவர்களது நடிப்பு திறன் மூலம் ரசிகர் சேர்ந்தால், சிலருக்கு வெகு காலம் சென்ற பின்பும் அவருடைய உண்மையான கேரக்டருக்காக ரசிகர்கள் கூடுவது உண்டு. அந்த வகையில், மோகனுக்கு அமைந்துள்ளது இப்படி ஒரு ரசிகர் பட்டாளம்.