“நான் வந்துட்டேன்னு சொல்லு”-சசிகலா என்ட்ரி

“அவ்வளவுதான். இனி முடிஞ்சது அதிமுக என யாரும் நினைக்க வேண்டாம்
எனது என்ட்ரி ஆரம்பம் ஆகிவிட்டது.” என்று அதிரடியாக பேட்டி கொடுத்துள்ளார் சசிகலா.

அதிமுக தற்போது பேஸ்மெண்ட் வீக்காக இருக்கும் கட்சியாக மாறி வரும் பொழுது அந்த இயக்கத்தை ஜெயலலிதாவோடு சேர்ந்து வளர்த்தெடுத்தவர் என்று சொல்லி வரும் சசிகலா தற்போது கட்சியை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் என சசிகலா போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார்.

“எம்ஜிஆருக்கு பின்பு ஜெயலலிதாவும் நானும் பல இன்னல்களை சந்தித்தே மிகப்பெரிய இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டமைத்தோம். இந்தியாவிலேயே 3வது மிகப்பெரிய இயக்கமாக உருவாக்கிய போதும் தொடர்ச்சரிவுகளை சந்தித்து வருகிறது என்றால் அது சுயநலவாதிகள் கட்சியை வழிநடத்தியதே காரணம்” என்று கூறியுள்ளார்.

வேடிக்கை

அதிமுகவில் நடக்கும் கூச்சல், குழப்பம், சரிவு, அவமானம் ஆகியவை குறித்து பேசிய சசிகலா “எல்லாவற்றையும் நான் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாரையும் கட்சியிலிருந்து நீக்குவது என்பது எம்ஜிஆருக்கு பிடிக்காத விஷயம். ஜெயலலிதாவுக்கு தொந்தரவுகளை கொடுத்த ஆர் எம் வீரப்பன் போன்றோரையே எம்ஜிஆர் கட்சியில் இருந்து நீக்கவில்லை.

சாதிய அரசியல் வலையில் சிக்கியதா அதிமுக?

“சொந்த ஊர், சொந்த சாதி என்றெல்லாம் எனக்கு எதுவும் இல்லை. அதிமுகவில் வாரிசு அரசியலும் சாதிய அரசியலும் கிடையாது என்பது ஆரம்ப கட்ட தொண்டர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் சாதி அரசியல் நடத்தி வருகின்றனர். இதனை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நானும் அவ்வாறு பொறுத்துக்கொள்ள மாட்டேன். நான் சாதிய அரசியல் செய்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்படி முதல்வர் பதவி கிடைத்திருக்கும்? “

என்று வினவினார்

தற்போது அதிமுக 3வது மற்றும் 4வது இடத்துக்கு சென்றதற்கெல்லாம் காரணம் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்த போதும் கட்சி சரியாக வழிநடத்தப்படவில்லை என்பதுதான். தானும் கெட்டு கட்சியையும் கெடுக்க வேண்டாம் என்பதே அனைவரின் எண்ணம் ஆகும். இனிமேல் அதிமுகவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. நான் இத்தனை நாள் சொன்னது வேறு. நமது நேரம் கனிந்து தற்போது வந்துள்ளது. மக்களிடையே நான் சொல்லி வந்த நேரம் இதுதான். இனி மக்கள் அதிமுக பக்கம் நிற்பார்கள் அதிமுக முடிந்து விட்டது என்றெல்லாம் இனி யாரும் நினைக்க வேண்டாம். ஏனெனில் என்னுடைய என்ட்ரி ஆரம்பம் ஆகிவிட்டது. என் பின்னால் தொண்டர்களும் மக்களும் இருக்கிறார்கள். 2026-ல் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் ” என்று சூளுரைத்துள்ளார் சசிகலா.

என்னையே பேச வச்சுட்டாங்க!

“நான் எப்போதுமே அதிகம் பேசாதவர் என்பது தெரியும். அதுவும் முக்கியமான நேரத்தில் மட்டுமே குரல் கொடுப்பேன். தற்போது நான் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிமுக தொண்டர்கள் இனி கவலைப்பட வேண்டாம். விரைவில் உங்களை சந்திக்க நான் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். பட்டி தொட்டி எல்லாம் சென்று மக்களை சந்தித்து திமுகவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காக்க வேண்டும் என்பதுதான் கட்டாயம். நான் அதை நன்கு புரிந்தவர் என்பதால் அதற்காக நான் அவசரப்படவில்லை. அதிமுக எனக்கு ஒரு கண் என்றால் மற்றொரு கண் தமிழக மக்கள். இந்த நேரத்தில் இடைத்தேர்தலை புறக்கணித்தது சரி இல்லை என்றும் எப்போதுமே பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் என்றும் கூறியுள்ளார்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE