80 வருஷம் உள்ளாடை கூட மாத்தல. உலகின் மிகக் கஞ்ச கோடீஸ்வரி
ஒரு படத்தில் மனோரமா உயிரோடு கோழியை காலில் கட்டி தலைகீழாக தொங்கவிட்டுக்கொண்டு அதனைப் பார்த்து மோப்பம் பிடித்தபடியே பழைய சோறு சாப்பிடுவார். எஸ் வி சேகர் ஓடு சண்டை போடும் சாக்கில் எண்ணெய் கடையில எண்ணெய் திருடுவார். ஆடை அணிந்தால் வெளுத்துப் போய்விடும் என வீட்டுக்குள் ஆடை இன்றி வருவார். கணவர் குளத்தில் விழுந்த போதும் கயிறு வாங்க காசு செலவு செய்ய வேண்டுமா என யோசித்து குளம் வற்றிய பின் மீண்டு வருமாறு கூறி விட்டு செல்வார்.
இப்படி எல்லாம் சினிமா கதாபாத்திரங்கள் தான் நகைச்சுவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நினைத்திருப்போம்.
ஆனால் உண்மையிலேயே உலகின் மிக கஞ்சமான, இழிவான பெண் என்று கின்னஸ் ஒரு பெண்ணுக்கு பட்டம் கொடுத்திருக்கிறது. அதுவும் அவர் மிகப் பெரிய கோடீஸ்வரிகளில் ஒருவர் ஆவார்.
யார் அவர்?
1835ல் பிறந்த ஹெட்டி கிரீன் என்ற அமெரிக்க பெண்மணிக்கு 6 வயதிலேயே வங்கியில் கணக்கு திறக்கப்பட்டது. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட செய்திகளை தேடி தேடி படிக்கும் அவர் வால்ஸ்ட்ரீட் பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்.
வாழ்க்கை முழுவதும் வெறும் 2 சென்ட் மதிப்புள்ள மிகக் குட்டியான வாடகை வீட்டில் தங்கி இருந்தார் ஹெட்டி கிரீன்.
பங்குச்சந்தை மூலம் பழக்கமான மிகப்பெரும் கோடீஸ்வரரை திருமணம் செய்த போதும் இவருக்கு தந்தை வீட்டில் இருந்து கோடி கணக்கில் சொத்துக்கள் கிடைத்த போதும், இவரே பங்குச்சந்தையில் கோடி கோடியாய் சம்பாதித்த போதும் இவர் ஒரு பென்னி கூட செலவு செய்தது இல்லை.
கடைகளில் மீந்து போன பிஸ்கட்டுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பார்.
சூப்பர் மார்க்கெட் கடைக்காரர்களிடம் சண்டையிட்டு தனது நாய்க்கு இலவசமாக எலும்பு துண்டுகளை வாங்கி போடுவார்.
தனது மகனுக்கு காலே உடைந்த போதும், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காமல் இலவச மருத்துவ சிகிச்சைக்காக காத்திருந்து தாமதித்து சிகிச்சை அளித்ததால் தனது மகனும் ஊனமானார்.
அவசர மருத்துவ செலவு கூட பணம் செலவு செய்ய முடியாது என்று மறுத்துவிட்டதால் இவர் உலகின் மிக இழிவான பெண் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்.
இவர் தனது வாழ்வில் ஒரு முறை கூட சுடு தண்ணீரில் குளித்தது இல்லையாம். கருப்பு நிறத்தில் ஒரே ஒரு அங்கியை அணிந்து இருந்த அவர் அது முழுமையாக கிழிந்து போகும் வரை மாற்றவில்லையாம்.
அதேபோல தனது 16 வது வயதில் வாங்கிய உள்ளாடையை 81 வயது வரை அவர் மாற்றவே இல்லையாம். அது முழுமையாக கிழிந்து போன போதும் கூட அவர் அதையே அணிந்திருக்கிறார்.
1916-ல் அவர் இறந்த பிறகு அவரை உலகின் மிக கஞ்சமான பெண்மணி என்றும் meanest woman அதாவது இழிவான பெண் என்றும் கின்னஸ் சாதனைகள் அறிவிக்கப்பட்டதாம்.
நியூயார்க்கில் அவர் மரணமடையும்போது அவருக்கு வயது 81.
இவர் தனது வேலைக்காரியிடம் சம்பள உயர்வு தொடர்பாக சண்டையிட்டு கொண்டிருந்தபோது பக்கவாதம் வந்து உயிரிழந்திருக்கிறார்.
ஆனால் இவருக்கு பிறந்த குழந்தைகள் இரண்டும் மிகவும் தாராளமாக தனது சொத்துக்களை ஏழை எளிய குழந்தைகளுக்கும் அவர்களது கல்விக்கும் தாராளமாக தானம் கொடுத்து உதவியுள்ளனர்.
கோடிக்கணக்கில் பணம் சேர்த்தாரே தவிர அவர் அவசர தேவைக்கு கூட அதனை பயன்படுத்தவில்லை. எனவே கஞ்சத்தனத்தின் மீது வந்த வெறுப்பு காரணமாகவே அவருடைய குழந்தைகள் மிக தாராளமாக செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் உங்கள் வாழ்வில் சந்தித்த மிகவும் கஞ்சத்தனமாக மனிதர் யார் அவர் எந்த விஷயத்திற்கெல்லாம் கற்றுத்தணம் பார்த்தார் என்பதை கமெண்டில் பகிருங்கள்.