நக்கல் சிரிப்பால் ரோஷப்பட்டு, 40,000 கோடி சொத்து சேர்த்து, CM- ஐயே காக்க வைத்த ராமோஜி ராவ். யாரிவர்?

உலகிலேயே மிக பிரம்மாண்டமான பெரிய அளவிலான நிலப்பரப்பில் அமைந்துள்ள ஸ்டுடியோ தான் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி. இதன் உரிமையாளர் மிகப் பெரும் தொழிலதிபர் ராமோஜி ராவ் ஆவார். அவர் ஜூன் 9ம் தேதி அதிகாலை வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவராக அறியப்படும் ராமோஜிராவ் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 87.

இவரைப் பற்றி பலரும் அறியாத தகவல்கள்

40,000 கோடி சொத்துக்கு உரிமையாளர்

இவரது தாத்தா ராமையா இறந்து 13-வது நாளில் இவர் பிறந்ததால் இவருக்கும் ராமையா என பெயர் சூட்டினர் பெற்றோர்

ஆனால், அந்த பெயர் ஸ்டைலாக இல்லை என்பதற்காக பள்ளி செல்லும் போது ராமோஜிராவ் என தனக்குத்தானே பெயரை மாற்றிக் கொண்டார்

1950 இல் டெல்லியில் விளம்பர நிறுவனத்தில் கலைஞராக பணியாற்றினார்

1961 திருமணமாகி பெரும் வரதட்சணையோடு ஹைதராபாத்துக்கு வந்தார்

1962 இல் மார்க்கத்தரிசி சிட் ஃபண்டு என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய சீட்டு கம்பெனியை தனக்கு கிடைத்த வரதட்சணை பணத்தை வைத்து தொடங்கினார்.

1965 இல் கிரண் ஆட்ஸ் என்ற பெயரில் விளம்பர நிறுவனம் தொடங்கினார். அதே ஆண்டு விவசாயிகளுக்கான மாத இதழும் தொடங்கினார்.

1970 இல் அவுட்டோர் விளம்பர ஏஜென்சியை தொடங்கினார். இது கோரமண்டல் உர நிறுவனத்திடம் காண்ட்ராக்ட் மேற்கொண்டு முன்னேறியது.

1974 இநாடு அதாவது ‘இன்று’ என்ற பொருள்படும் வகையில் தெலுங்கு செய்தித்தாள் தொடங்கினார்.

இவரது செய்தித்தாள் மிகவும் பிரபலமானதால் விஜயவாடாவில் போஸ்ட் மூலம் செய்தித்தாளை வாங்கி படிக்க மக்கள் மதியம் வரை காத்திருந்தனர்.

இதை சரிசெய்ய விஜயவாடாவில் இருந்த ஆந்திர ஜோதி என்ற செய்தித்தாள் நிறுவனரிடம், தனது பத்திரிக்கையை அச்சுடித்து விநியோகிக்குமாறு கேட்க, அவரும் ராமோஜிராவை கேலி செய்யும் வகையில் ‘நீங்களே சொந்தமாக ஒரு நியூஸ் பேப்பர் அச்சு நிறுவனத்தை ஆரம்பியுங்கள் பார்க்கலாம்’ என்று கூறி நக்கலாக சிரித்தார்.

ரூ.96,000-க்கு பழைய பிரின்டிங் மிஷினை வாங்கி, விசாகப்பட்டினத்தில் கைவிடப்பட்ட சினிமா ஸ்டுடியோ ஒன்றை 33 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து ஈநாடு பேப்பரை அச்சடித்து கிட்டத்தட்ட 30-40 லட்சம் பிரதிகளை சர்குலேஷனில் விட்டார் ராமோஜிராவ்.

1980களில் என்டி ராமராவ் பற்றி நல்ல விதமாக ஈனாடு செய்திகளில் பிரசுரித்து தெலுங்கு தேச கட்சியை வளர்த்து விட்டார். இதன் காரணமாக ஆந்திர முதலமைச்சரானார் என்டி ராமராவ்.

1983 இல் உஷா கிரன் மூவிஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்.

1984ல் விசாகப்பட்டினத்தில் உஷோதயா ஷிப்பிங் என்ற பெயரில் கப்பல் கட்டும் நிறுவனம் தொடங்கினார்.

1989இல் நடந்த தேர்தலின் போது இவர் என்டி ராமராவுக்கு ஆதரவு தருட் விதமாக எவ்வித செய்தியையும் வெளியிடாததாலும், பிற காரணங்களாலும் என்டி ராமராவ் அந்த தேர்தலில் தோற்றுப் போனார்.

1994 ராமோஜிராவின் வீட்டுக்கு வந்து அவரது வாசல்கதவின் முன்பாக 10 நிமிடங்கள் காத்திருந்தார் என்டி ராமராவ். அப்போதும் ராமோஜிராவ் வெளியே வந்து அவரை சந்திக்க மறுத்துவிட்டார். இருவருக்கும் அப்போது இணக்கமான உறவு இல்லாத காரணத்தால் தேர்தலில் ஆதரவு கொடுக்க மறுத்து விட்டதே இந்த சந்திப்பு மறுப்புக்கும் காரணமாகும். இதை அடுத்து தனது கணவர் என்டி ராமராவை வேண்டுமென்றே காக்க வைத்து அவமதித்ததாக ராமோஜிராவ் மீது குற்றம் சாட்டினார் என்.டி.ராமாராவின் மனைவி.

1995இல் Etv என்ற பெயரில் தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தை தொடங்கினார் ராமோராவ். அப்போது தான் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேச கட்சி பிரசிடெண்ட் ஆக என்டிஆரை நீக்கிவிட்டு தான் அந்த பொறுப்பில் அமர்ந்தார். பின்பு சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு வந்தது இ டிவி செய்தி நிறுவனம்.

1996 இல் 2000 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய ஸ்டுடியோ காம்ப்ளக்ஸை படப்பிடிப்பு தளத்துக்காக தொடங்கினார் ராமோஜிராவ். இதுவே தனது பெயரில் தொடங்கப்படும் கடைசி திட்டம் என்றும் அவர் கூறினார்.

ஸ்டுடியோ ஃபிலிம் சிட்டி திறப்புக்கு பின்பு அவர் அதனை பிரமோட் செய்யும் வகையில் நேர்காணல்களை கொடுத்து வந்ததால் பிபிசி நிறுவனம் அவரை The reclusive Rupert Murdoch of India என்று பெயரிட்டது. அதாவது சனம் சேராது வாழ்ந்து வந்த அமெரிக்க ஊடக காந்தமான ருபெர்ட்டுடன் ஒப்பிட்டது.

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டிக்கு இடம் தேடிக் கொண்டிருந்தபோது நக்சல்ஸ் அவரை கடத்த திட்டமிட்டதாக மாவோயிஸ்ட் செயல்பாட்டாளரான வரவராராவ் மூலம் கடிதம் கைமாற்றப்பட்டது. ஆனால் அந்த கடிதத்தை போலீசார் இடை மறுத்து தடுத்ததால் ராமோஜிராவை கடத்தும் திட்டம் சுக்கு நூறானது.

1997 அப்போது அமைந்த மத்திய அரசு மீது வெறுப்பைக் கொண்டிருந்த அவர் மாநிலங்களுக்கு தன்னாட்சி என்ற முழக்கத்தை முன் வைத்தார்.

2002 ஆம் ஆண்டு 6 புதிய உள்ளூர் மொழி சேனல்களை தொடங்கிய ராமோஜி ராவ், 2008ல் அதன் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தி இந்தியாவிலேயே உள்ளூர் மொழியில் மிகப்பெரிய செய்தி நெட்வொர்க் என்ற அளவுக்கு உயர்ந்தார் ராமோஜிராவ்.

2004 ஆம் ஆண்டு அமைந்த காங்கிரஸ் அரசு அவருக்கு பிடிக்காது போனது. மூத்த பத்திரிகையாளர் குல்திப் நாயரை அழைத்து ஒரு இத்தாலிய பெண் அதாவது சோனியா காந்தி நம் நாட்டுக்கு பிரதமராக வந்து இந்தியாவை ஆளக்கூடாது என்றும், ஏதாவது செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு மார்கதரிசி சிட்ஃபண்ட் நிறுவனம் சட்டரீதியாக பிரச்சனைகள் சந்திந்தபோது நிம்மேஷ் கம்பானி என்ற மும்பையைச் சேர்ந்த முதலீட்டாளர் 6780 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கி நிதி நிறுவனத்தை காப்பாற்றினார்.

ஆனால் கம்பானி முகேஷ் அம்பானியின் சார்பாக தான் அந்தப் பங்குகளை வாங்கியது பின்னர் தெரிய வந்தபின் 2015 ஆம் ஆண்டு ஏராளமான ஈ டிவி நெட்வொர்க் நிறுவனங்கள் ரிலையன்ஸ் குழுமத்திற்கு கைமாறியது.

பிரதமர் மோடியுடன் நட்பாக இருந்தவர் ராமோஜிராவ். 2014 ஆம் ஆண்டு பிரச்சாரத்தின் போது ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டிக்கு வந்து ஈடிவிக்கு ஹிந்தியில் பேட்டி கொடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

தொலைநோக்கு பார்வை கொண்ட ராமோஜிரா 2014 ஆம் ஆண்டு ஆந்திரா இரண்டாக பிரிவதாக முன்கூட்டியே அறிந்து தனது செய்தி சேனல்களை ஹைதராபாத்துக்கு மாத்தி வரி சலுகைகள் பெற்றார்.

இவர் நடத்தி வந்த பிரியா ஊறுகாய் நிறுவனத்தில் சுமார் 10 டன் கெட்டுப்போன ஊறுகாயை ஈநாடு பத்திரிக்கைகளை விநியோகிக்க பயன்படுத்தப்படும் வண்டிகளில் வைத்து ஏஜென்ட்டுக்கள் மூலம் பொது மக்களுக்கு விநியோகித்ததாக அந்த ஊறுகாய் நிறுவனத்தில் பேக்கேஜிங் துறையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஊழியர்கள் குற்றம் சாட்டியதால் இவர் சர்ச்சைக்கு ஆளானார்.

4 அடுக்கு மாடிகள் கொண்ட வீட்டில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டிக்குள்ளையே வசித்து வந்த இவர் தனது வீட்டுக்கு என தனியாக ஹெலி பேட் அமைத்திருந்தார். மிகவும் வசதியான செல்வந்தர்களும், அரசியல் முக்கியப் புள்ளிகளும் இவரை சந்திக்க அடிக்கடி வந்து சென்றதால் அந்த ஹெலிபேட் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

ராமோஜிராவ் எப்போதுமே வெள்ளை நிற சஃபாரி சூட் மட்டுமே அணிந்திருப்பார்.

கடந்த 5ம் தேதி உயர் ரத்த அழுத்தம், மூச்சு திணறல் பிரச்சனையால் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதியாகி இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE