கங்கனாவுக்குப் பளார்! – சேரனைத் திட்டும் பாஜகவினர்
நடிகை கங்கனா ரனாவத் மண்டி தொகுதியில் போட்டுயிட்டு எம்பி ஆக தேர்வாகியுள்ளார். இவர் சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்த போது அங்கு இருந்த சி ஐ எஸ் எஃப் பெண் பாதுகாவலர் குர்மிந்தர் கவுர் என்பவர் கங்கணாவை பளார் என கன்னத்தில் அறைந்தார்.
5 விரல்களும் பதியும் அளவுக்கு எம்பி ஆன உடனேயே கங்கணாவுக்கு கிடைத்த பரிசு ஆனது இணையத்தில் பெரும் பேசு பொருளானது.
ஏற்கனவே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர் கங்கனா ரனாவத். இதனால் ட்விட்டரே கங்கனாவின் கருத்துக்களைப் பார்த்து அவரை தனது தளத்தில் இருந்து நீக்கியது. இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தொடர் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு அவர் பாலிவுட் நடிகர்களுக்கு எதிராக பேசியதால் அங்கு மறைமுகமாக ஓரம் கட்டப்பட்டு அவரது படங்கள் தோல்வியடைந்தன.
பாஜகவில் சேர்ந்து எம்பியாக தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்து இறங்கினார்.
அப்போது குல்விந்தர் கவுர் என்ற பெண் காவலர் கங்கனா ரனாவத்தை 5 விரல்களும் பதியும்படி கன்னத்தில் பளார் என அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அடித்தற்கு காரணம் என்ன ?
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தரக்குறைவாக காசுக்காக போராடும் தீவிரவாதிகள் என கங்கனா பேசி இருந்தார். அதனால் தான் அடித்தேன் என்றும் தனது அம்மாவும் அந்த போராட்டத்தில் அமர்ந்திருந்தவர் என்றும் 100 ரூபாய் காக போராடும் தீவிரவாதி என்று கூறியதால்தான் அடித்தேன் என்றும் குல்விந்தர் கவுர் விளக்கம் கொடுத்தார்.
சரியா? தவறா?
குல்விந்தர் கவுர் செய்தது நியாயம் என்றும் ஒட்டுமொத்த மக்களின் சார்பாக அவர் அடித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு பக்கம் கருத்து பரவி வந்தாலும் கங்கானா ரனாவத்துக்கு ஆதரவாகவும் சில கருத்துக்கள் வருகின்றன. ஆனால், வந்ததிலேயே சில நடுநிலையான கருத்துக்களும் இருந்தன. சில சி ஐ எஸ் எப் என்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்பதை அந்த காவலர் மறந்துவிட்டார் என்றும் இதனை சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு படை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. காரணம் அணு சக்தி, எண்ணெய் வளம் உள்பட முக்கியமான இடங்களில் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு தான் போடப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் எதிராகவும் சுய விருப்பு வெறுப்புகளுக்காகவும் செயல்பட தொடங்கினால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கங்கணாவுக்கு பளார் விட்ட பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
சேரன் கருத்து
நடிகரும் இயக்குனருமான சேரன் இந்த சம்பவத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில்,
“இந்தப் பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன். அந்த அடி நடிகைக்கானதல்ல. வாக்களித்த மக்களுக்கானது. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால் மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார். Hats off.. ”
என்று நடிகர் சேரன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் சேரன் கூறிய இந்த கருத்துக்களுக்கு ஆதரவாகவும் எதிர்பாகவும் பல கமெண்ட்கள் வந்த போதும் சேரனுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரை கமெண்ட்களில் சரமாரியாக வசைபாடி வருகின்றனர்.