“இன்னொரு 30 வருஷம் காக்க வைக்காதீங்க” கேன்ஸில் விருது வென்ற இந்திய பெண் இயக்குனர்

இந்திய சினிமா கோடிகளைக் குவிக்கும் தொழில் என்றபோதும், இங்கு மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப கமர்ஷியல் ஹிட் படங்களைக் கொடுத்து கல்லா கட்ட வேண்டும் என்ற மனப்பாங்குதான் நீண்ட காலம் சினிமாத் துறையில் ஒரு சாபமாக இருந்தது.

ஆனால், இன்று ரசிகர்களின் மனப்பாங்கு மாறிவிட்டது. மலையாளம் மட்டுமின்றி யதார்த்தமாக சினிமா எடுக்கும் இயக்குநர்களுக்கும் தமிழ் திரையுலகிலும் வாசல் கதவுகள் திறக்கப்படுகின்றனர். ரசிகர்களே இந்த மாற்றத்துக்கும் பெரும் காரணம்.

எது எப்படியிருந்தாலும், விருதுகளின் வேட்கைக்கும், அங்கீகாரத்தின் அழகிய மாலைகளை சூடிக்கொள்ளவும் இயக்குநர்கள் போட்டி போடுகின்றனர். அதிலும், ஆண்-பெண் என்ற பாகுபாடு இன்றி பெண் இயக்குநர்கள் புதுமைப் படைப்பதால், எலஃபென்ட் விஸ்பரர்ஸ் போன்ற படங்கள் ஆஸ்கர் தட்டின.

தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின் இந்திய சினிமா கேன்ஸ் திரைப்படவிழாவில் விருது ஏந்தவும் ஒரு பெண் இயக்குநர்தான் காரணமாகியிருக்கிறார். “ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்” என்ற படம் பாயல் கபாடியின் இயக்கத்தில் உருவானது. செவிலியப் பெண்களும் அவரது அறைத்தோழியும் என அவர்களிடையே உள்ள நட்பு, அதை பாதிக்கும் காரணிகள், இருந்தும் அதில் நீளும் பச்சாதாபம், மனிதநேயம் ஆகியவற்றை அழகாக குறும்படமாக்கியிருக்கிறார் பாயல்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் 2-வது உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸை இந்த குறும்படம் வென்றுள்ளது. இந்தப் படத்தில், கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் ஆகியோர் நடித்துள்ளனர். படம் திரையிடலுக்குப் பின், இந்தப் படத்துக்கு மிக நீண்ட கைதட்டலாக 8 நிமிடம் தொடர் கைதட்டல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

விருதை வாங்க மேடையேறும்போது பேசிய பெண் இயக்குநர் பாயல், “அடுத்த விருதைப் பெற இந்தியாவை 30 ஆண்டுகள் காக்க வைக்காதீங்க. உடன் பணியாற்றியவர்களுக்கும் தனது நன்றியைப் பகிர்ந்துகொண்டார்.” எனக் கேட்டுக் கொண்டார்.

அதிரடி காட்டிய அடுத்த இந்தியப் பெண் நடிகை

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற முதல் இந்திய பெண் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் அனசுயா சென்குப்தா. மும்பையில் அவருக்கு நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஷேம்லெஸ் படத்தில் நடித்தார். ஒரு போலீஸ்காரரை குத்திவிட்டு டெல்லியில் இருக்கும் விபச்சார விடுதியில் இருந்து தப்பியோடும் பாலியல் தொழிலாளியின் கதை தான் ஷேம்லெஸ். இதற்காக Un Certain Regard பிரிவில் அனசுயாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமயையும் பெற்றுள்ளார் அனசுயா சென்குப்தா.

Facebook
Instagram
YOUTUBE