அடிக்கடி டீ, காபி குடிக்கிறீங்களா? இதை படிங்க!
எப்ப பார்த்தாலும் சோறு சோறுன்னு என மணிவண்ணன் சொல்ற டயலாக் மாதிரி எப்ப பார்த்தாலும் பதிலா டீ, காப்பின்னு காலத்தை ஓட்டுறவங்களா நீங்க?
அப்போ இந்த செய்திய முழுசா படிங்க. காபி டீ யார் யாரெல்லாம் குடிக்கணும்? எப்ப குடிக்கணும்? எவ்வளவு குடிக்கணும்? எவ்வளவு முறை குடிக்கணும்? அப்படிங்கறத முழுசா விளக்கி இருக்கிறது “த காரிகை”.
இதெல்லாம் மட்டும் இல்ல, கண்ட்ரோல் இல்லாம காப்பி, டீ குடிச்சா என்ன ஆகும்னு இந்த செய்தில விளக்கி இருக்கோம்.
எச்சரிக்கை விடுத்தது யார்?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் என்ற ஒன்று உள்ளது.
அது இந்தியர்கள் சாப்பிட கூடாத வகை உணவுகளை பட்டியலிட்டு உள்ளது.
அதில், இந்தியர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளை பட்டியலிட்டு அதில் டீ, காபி ஆகியவை எப்போது சாப்பிட வேண்டும்? எப்போதெல்லாம் சாப்பிடக்கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
வெயிலிலும் டீ
மழைக்காலத்திலும் குளிருக்கும் சூடா ஒரு டீ குடிச்சா நல்லா தான் இருக்கும். ஆனா வெயில் 100க்கு மேல் சதம் அடித்து பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும்போதும் தமிழ்நாட்டிலும் இந்தியாவில் பல மாநிலங்களிலும் டீக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
வெட்ட வெயிலில் கூட டீ குடிக்க மக்கள் அங்கங்க அல பாஞ்சுட்டு இருக்காங்க.
ஒரு சிலர் காலையில் மொறுமொறுன்னு தோசை சாப்பிட்டதும் ஒரு காபி குடிப்பாங்க. இன்னும் சிலர் மதியம் சாப்பிட்டதும் ஒரு டீ அடிப்பாங்க.
இப்படி அடிக்கடி காபி டீனு மாத்தி மாத்தி குடிச்சா உடம்புல இருக்கிற நரம்பு மண்டலம் முழுசா வேலை செய்ய முடியாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறதா இந்த ஆய்வு எச்சரிச்சிருக்கு.
எவ்வளவு காஃப்பின் தேவை?
150 மில்லி காய்ச்சிய காபியில், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் காஃப்பின் என்ற பொருள் 80 முதல் 120 மில்லி கிராம் வரை உள்ளது.
அதுவே இன்ஸ்டன்ட் காபியில் 50-65 மில்லிகிராம் காஃப்பின் உள்ளது.
30 முதல் 65 மில்லிகிராம் அளவுக்கு காஃபின் என்ற பொருள் தேனீரில் உள்ளது.
ஒரு நாளைக்கு ஒருவரின் உடலில் 300 மில்லி கிராமுக்கு அதிகமாக காஃபின் சேர்க்கக்கூடாது.
இந்த காபி டீ பானங்களில் உள்ள டானின் என்ற பொருளானது உடல் இரும்பு சத்தை உறிஞ்சுவதை தடுத்துவிடும். என்னதான் நீங்கள் இரும்பு சத்து மிகுந்த உணவு பொருட்களை எடுத்துக் கொண்டாலும் டானின் ஆனது உடலில் சேர விடாது.
அதுவே பால் கலக்காத தேனீரை நீங்கள் பருகும் போது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கரோனரி தமனி செயல்பாட்டை சீர்படுத்தி, வயிற்று புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உள்ளது என்றும் அந்த ஆய்வில் கூறியுள்ளது.
ஆனால் தொடர்ந்து காஃபி பருகும் போது உடல் ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயம் துடிப்பதில் கூட பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.