“ரெஸ்ட்ரூம் போக கூட வாக்கி டாக்கில பர்மிஷன் கேக்கணும்”-ரயில் ஓட்டும் பெண்கள் வேதனை
பெண்கள் பல சவாலான பணிகளை ஏற்கும் போது, கூடவே சில உடல் உபாதைகளை எதிர்கொள்கின்றனர் குறிப்பாக இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட வாக்கிடாக்கியில் பர்மிஷன் வாங்கி செல்ல வேண்டும் என்று புலம்புகின்றனர் பெண் லோகோ பைலட்ஸ்.
ஏற்கனவே பந்தோபஸ்தில் பெண் காவலர்கள் இருந்தால், அவர்களுக்கு இயற்கை உபாதைகளை கழிக்க சிரமமாக இருக்கும் என்று கூறி பந்தோபஸ்த, பாதுகாப்பு, ஊர்வலங்களில் பெண் போலீசார் பங்களிப்பு கொஞ்சம் கொஞ்சமாக தமிழக அரசால் திரும்ப பெறப்பட்டது.
தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே அவர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் ராணுவம், காவல்துறை, விமான ஓட்டிகள், கப்பலில் பணி என பல சவாலான பணிகளை செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு சமூகத்தில் என்னதான் ஊக்கம் கிடைத்தாலும் கூட அவசரமாக இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நேரத்தில் அவர்களால் உடனடியாக அதை செய்ய இயலாது.
இதனால், தற்போது புலம்பி வரும் பெண் லோகோ பைலட்ஸ்.
ரயில் ஓட்டும் அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க நேரும்போது பயணியர் ரயிலில் பயணித்தால் அதே ரயிலில் உள்ள ஏதேனும் கழிவறையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் அதற்கு முன் அவர்கள் வண்டியில் உள்ள மற்றொரு எஞ்சின் ஓட்டுனருக்கு வாக்கி டாக்கில் தகவல் தெரிவித்து விட வேண்டும். அது மட்டும் இன்றி ஓட்டுவது சரக்கு ரயிலாக இருந்தால், அங்கு கழிப்பறை இருக்காது. அவர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்து அடுத்த ரயில் நிலைய மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அங்கு ரயில் நின்றதும் அங்கிருக்கும் கழிவறையை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் .
இப்படி சுச்சூ போக கூட வாக்கி டாக்கியில் பர்மிஷன் வாங்க வேண்டும் என்பது அவர்களுக்கு சங்கடம் தரக்கூடிய விஷயமாக அமைகிறது.
கூலி வேலைக்கு சாதாரணமாக செல்லும் பெண்கள் கூட அவர்களுக்கு கிடைத்த இடத்தில் இயற்கை உபாதைகளை கழித்து நிம்மதியோடு தொடர்ந்து வேலையை செய்கின்றனர். பல்லாயிரக்கணக்கான உயிர்களை பத்திரமாக மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில் ஓட்டும் பெண்கள் தங்களுக்கு ஒரு தீர்வு தேவை என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் வேலை செய்யும் ரயிலை இயக்கும் பெண் ஓட்டுநர்கள் 1700 பேரில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் உதவி ஓட்டுனர்களாகவே உள்ளனர்.
ஒரு ஆண் ஓட்டுனர் எனக்கு உதவியாக ரயிலில் இருக்கும் பெண்கள் இப்படி வாக்கி டாக்கி மூலம் பகிரங்கமாக சுச்சூ போக கூட பர்மிஷன் கேட்க தயங்கும் நிலை உள்ளது.
இதனால் அவர்கள் நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பதால் பல்வேறு உடல் உபாதைகளும் நோய்களும் சிறுநீரக பாதை தொற்றும் ஏற்படுகிறது. எனவே சரக்கு ரயில் ஓட்டும் பெண்களுக்கு கழிப்பறையோடு கூடிய ஒரு பெட்டி இணைத்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.