அடேங்கப்பா, வாழைப்பூவுல இவ்ளோ பெனிஃபிட்டா?
வாழைப்பூவில் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல நன்மைகள் உள்ளது. இதன் முதல் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
சிறுநீரக ஆரோக்கியம்
வாழைப்பூவில் சிறுநீரக கற்களை கரைக்க தேவையான சத்துக்கள் உள்ளன. சிறுநீரகத்தில் வீக்கம் சிறுநீரக பிரச்சனைகளை குணப்படுத்துவது போன்ற பல பிரச்சினைகளுக்கு இது தீர்வு கொடுக்கும்.
இரும்புச்சத்து
உடலில் இரும்புச் சத்து குறைந்தால் தென்படும் அறிகுறிகளான சோர்வு, மயக்கம், முறையற்ற இதயத்துடிப்பு, வறண்ட பாதங்கள் மற்றும் கைகள் சரி செய்து ரத்த சிவப்பணுக்கள் அளவை அதிகரித்து இரும்பு சத்து குறைபாட்டை நீக்கும். அனிமியாவை போக்கும் என்று நம்பப்படுகிறது.
செரிமான கோளாறு
வாழைப்பூவில் ஆல்கலைன் இருப்பதால் அந்த அமிலங்கள் சிறந்த மலம் இலக்கியாக பயன்பட்டு குடல் இயக்கத்துக்கு சிறப்பாக உதவும். அத்துடன் அல்சர் மற்றும் வலியையும் குறைக்கிறது.
உடல் எடை குறைக்கும்
சீரான கலோரிகளை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கவும் உதவும். புரதம் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் கொண்டு பசியை கட்டுப்படுத்தி, உடலை நீண்ட நேரம் பசுயின்றி வைக்கவும் இது உதவும் என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பூவை எடுத்துக் கொள்ளலாம்.
ஆண்குறி பிரச்சினைகள் நீங்கும்
ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து சிறுநீர் அசவுகரியங்களை போக்கும்.
தலைமுடி வளர்ச்சி
வாழைப்பூவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வளர்ச்சியை குறைக்கும். வாழைப்பூவின் சாறு தலைமுடி சீரமாகவும், எண்ணெய், கிரீம் மற்றும் மாஸ்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
எலும்பு ஆரோக்கியம்
வாழைப்பூவில் பொட்டாசியம் கால்சியம் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை இருப்பதால் கேட்சின் மற்றும் குயிர்செடின் ஆகிய ஃப்ளேவனாய்டுகள் எலும்பு புறை நோயை நீக்க உதவும்.