பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினுக்கு ஒரு சிறந்த மாஸ் ஓபனிங் திரைப்படங்கள் மூலம் கிடைத்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே கவினுக்கு ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நாடகத்தில் நடிப்பதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை என மறுத்த கவின் அந்த வாய்ப்பை கைவிட்ட பின்பு தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. லிஃப்ட், டாடா என பல ஹிட் படங்களை அவர் கொடுத்திருந்தாலும், அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையில் சிறப்பான ஒரு சம்பவம் வரவில்லை என்று அவரது ரசிகர்கள் காத்திருந்தனர்.

அப்படி கவின் நடிப்புக்கு சிறப்பான ஒரு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தற்போது வெளிவந்திருக்கிறது ஸ்டார் திரைப்படம்.

படத்தின் ஒன்லைன் என்ன?

பழைய திரைப்படமான அஜித் நடித்த முகவரி திரைப்படத்தை பார்த்திருந்தால் இந்த படத்தை பார்ப்பதும் அப்படியேதான் இருக்கும். இரு படங்களுக்கும் அவ்வளவு ஒற்றுமை உள்ளது.

கதை என்ன?

சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் இளம் ஆண்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் நாயகிகள், வாய்ப்பு கிடைக்காமல் போகும்போது அவரும் அவர் சார்ந்த குடும்பமும் படும் கஷ்டம், “நடிப்பு வரலப்பா” என அழுது புலம்பும் கவினின் காட்சிகள் என பல அம்சங்கள் கொண்ட கதை ஸ்டார் படத்தில் உள்ளது.

படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. ஸ்டில்ஸ் ரவியின் மகனான இளன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இசையும் கவினின் நடிப்பும் தான் இந்த படத்தை தாங்கி நிற்கும் பில்லர்களாக உள்ளன.

ஸ்டார் திரைப்படத்தில் கவினுக்கு 2 நாயகிகள். அதில் அதிதி அறிமுகமாகும் காட்சிகள் படத்தில் ஒட்டாமல் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. படத்தில் விறுவிறுப்பான காட்சிகள் ஒன்று இருந்தால் அடுத்த வரும் காட்சி சுமாராக இருப்பதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

படத்தில் 3 சஸ்பென்ஸ் காட்சிகளும், கிளைமாக்ஸ் டுவிஸ்ட்ம் படத்தை வேகமாக நகர்த்த முயற்சி செய்கின்றன.

மலையாள மொழி படத்தைப் போல சினிமாவில் வாய்ப்பு பெற முயலும் ஒரு நாயகனின் கதை இதன் இயல்பாக படமாக்கப்பட்டுள்ளது.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE