அட்றா சக்க! கூடவே பேசி, இங்கிலீஷ் கத்துக்கொடுக்கும் Google AI
நிறைய பேருக்கு ஆங்கிலம் பேச வேண்டும் என்பதை விட ஆங்கிலத்தில் புலமையாக பேச வேண்டும் என்பதே ஆர்வமாக இருக்கும்.
என்ன தான் கஸ்டமர் கேர் எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு எனக்கும் ஆங்கிலம் தெரியும் என உதார் விட்டாலும். நிஜமாகவே புலமையான ஆங்கிலம் தெரிந்த நபர்களிடம் பேசும்போது இன்னமும் ஒரு சிலர் திணறித் தான் போகின்றனர்.
இதற்கு அவர்கள் மனதில் நினைத்த வார்த்தையை அப்படியே ஆங்கிலத்தில் பேசத் தெரியாதது காரணமாக இருக்கும்.
எந்த வார்த்தைக்கு எந்த சொல்லை பயன்படுத்துவது என்ற ‘வொக்காபுலரி‘ விளங்கிவிட்டால் போதும். மனம் சற்றும் தயங்காமல் ஆங்கிலத்தில் பேசுவது என்ன? பாடியே தள்ளும்.
அப்படி ஆங்கிலத்தில் புதுப்புது அன்றாட பயன்பாட்டு வார்த்தைகளை கற்றுக்கொள்ள google ஒரு சிறந்த தொழில்நுட்ப வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஏ ஐ என்ற ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மூலம் இயங்கும் ‘ஸ்பீக்கிங் ப்ராக்டிஸ்’ என்ற வசதியில் கூகுள் உங்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும்.
இதற்கென நீங்கள் எந்த பிரத்தியேக ஆப்பையும் ஸ்மார்ட் ஃபோனில் பயன்படுத்த தேவையில்லை.
அதன் ஆங்கில வகுப்பில் சேர வேண்டும் என்று அவசியமும் இல்லை.
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிட்டு உங்கள் ஸ்மார்ட் போனில் google-ஐ திறந்தாலே போதும்.
நீங்கள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தோடு ஸ்பீக்கிங் ப்ராக்டிஸ் மூலம் ஆங்கிலத்திலேயே உரையாடலாம். உங்கள் தவறுகளை கூகுள் திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கும். உங்களுக்கு சொல்லியும் கொடுக்கும்.
எப்படி பயன்படுத்துவது?
இந்த வசதியைப் பயன்படுத்த நீங்கள் கூகுளின் சர்ச் லேப் ப்ரோக்ராமில் உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அதில் ஒரு பயனராக ஆக்டிவேட் ஆகி விட்டீர்கள் என்றால் உங்கள் google ஸர்ச் பாரில் இந்த வசதி உங்களுக்கு கிடைக்கும்.
என்ன மாதிரியான கேள்விகள்?
‘What should I do to get into shape?’ என்ற சிம்பிளான கேள்விகளை எழுப்பி தொடர்ந்து கூகுலுடன் நீங்கள் உரையாடலாம்.
யாரெல்லாம் இதை பயன்படுத்தலாம்?
இந்த வசதியானது இந்தியா, அர்ஜென்டினா, கொலம்பியா, இந்தோனேசியா, மெக்சிகோ, மற்றும் வெனிசுலா நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.