விஜய் டிவியை விட்டு சன் டிவிக்கு போனது ஏன்? வெங்கடேஷ் பட் என்ன சொன்னார்?
குக் வித் கோமாளி என்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி கடந்த 4 சீசன்களில் ஜட்ஜ் ஆக இருந்தவர் வெங்கடேஷ் பட்.
ஆனால் 5-வது சீசன் ஆன இந்த முறை வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்கிறார். ஆனால் அதே செஃப் தாமு இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ஜட்ஜ் ஆக இருக்கிறார்.
வெங்கடேஷ் பட் அடுத்து மீடியா மேஷன் என்ற குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனமும் விஜய் டிவியில் இருந்து வெளியேறியது.
இது வெங்கடேஷ் பட் மற்றும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பதாக அமைந்தது.
இருந்த போதும் 5வது சீசனுக்கு வரவேற்பும் தற்போது அதிகமாகி தான் வருகிறது.
இந்த நிலையில் தான் சன் டிவியில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி போன்று ‘டாப் குக் டுப் குக்’ என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி குறித்த டீசரை வெளியிட்டுள்ளது.
அதில் குக்கு வித் கோமாளி தொடரின் முந்தைய சீசனில் பங்கேற்று இருந்த தீபா, ஜி பி முத்து உள்ளிட்டோர் இதிலும் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து ஜி பி முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டபோது ரசிகர்கள் அவர்களிடம் ஏன் விஜய் டிவியை விட்டு சன் டிவியின் சமையல் நிகழ்ச்சிக்கு கோமாளியாக சென்றீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஜி பி முத்து “சன் டிவியில் அழைத்தார்கள். அதனால் சென்றேன். நாளை விஜய் டிவியில் அழைத்தால் அங்கும் செல்வேன். நான் மட்டுமா மாறினேன். ஜட்ஜ், தயாரிப்பு நிறுவனம் என ஏராளமானவர்தான் மாறி இருக்கின்றனர். ஏன் மாறினீர்கள் என்று கேள்வி கேட்டால் என்ன சொல்வது ? ” என ஜி பி முத்து வினவ, அந்த வீடியோவை வெங்கடேஷ் பட்டும் பகிர்ந்து உள்ளார்.
எதற்காக இந்த பேச்சு எல்லாம் என்று முதலில் கேட்ட அவர் ‘இருந்தாலும் பங்கம் செய்துட்ட மேன் நீ’ என்று கமெண்ட் செய்துள்ளார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.