60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி? யார் இந்த பேரழகி?
பொதுவாகவே அழகு என்றால் அது வயதோடு ஒப்பிட்டு பலரும் கூறுவார்கள்.
16 வயது சிட்டு, 18 வயது முன்பு இளம் பெண் என இன்று 30 வயதுக்குள் ஒட்டுமொத்த அழகையும் முடக்கி விடுவார்கள்.
30 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அழகி போட்டிகளில் எல்லாம் பங்கெடுக்க முடியாது என்ற மனப்பாங்கு இங்கு பலரிடமும் உள்ளது.
இந்த மனப்பாங்கை சுக்குநூறாக உடைக்கும் வகையில் 60 வயதான பெண் ஒருவர் பியோனஸ் அயர்ச்சிசிலிருந்து அர்ஜென்டினாவின் பிரபஞ்ச அழகிக்காக பிரதிநிதித்துவப்படுத்த போகும் பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அலெஜான்ரா என்ற 60 வயதான அந்த அழகிய மங்கை, துருதுரு நடையும் குழந்தைத்தனமான சிரிப்பையும் கொண்டு அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
அழகுக்கும் வெற்றிக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என நிரூபிக்கும் விதமாக இவர் இந்த போட்டியில் பங்கெடுத்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திசை திருப்பி இருக்கிறார்.
எந்த வயதானாலும் ஒரு பெண் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டால் அது அழகு தான் என இவர் வாழ்ந்து காட்டி வருகிறார்.
பியூனஸ் அயர்சின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் விரைவில் அர்ஜென்டினாவின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான போட்டியில் பங்கேற்க உள்ளார். இதை அடுத்து செப்டம்பர் 28ஆம் தேதி மெக்சிகோவில் நடைபெறும் பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் அவர் அர்ஜென்டினாவை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று நம்பப்படுகிறது.
அலஜான்ராவுக்கு 60 வயது என்று ஒன்று மட்டும் அவரை தனியாக அடையாளப்படுத்தவில்லை. அவர் அழகாகவும் அதேசமயம் அறிவாகவும் இருக்கிறார்.
தொழில் ரீதியாக வழக்கறிஞராகவும் பத்திரிக்கையாளராகவும் அவர் பணியாற்றி வருகிறார்.
அழகாய் இருக்கிற பொண்ணுங்க எல்லாம் அறிவா இருக்க மாட்டாங்க, அறிவா இருக்கிற பொண்ணுங்க எல்லாம் அல்வா கொடுத்துட்டு போவாங்க என்ற பாட்டுக்கு ஏற்ப அழகும் அறிவும் கலந்த அலெக்ஜாண்ட்ராவை போல அறிவு உள்ளவர்கள் உலகில் யாரும் இல்லை என நிரூபிக்கும் வகையில் அவர் தனக்கான போட்டிகளில் தொடர்ந்து உத்வேகத்தோடு முன்னேறி வருகிறார்.
நீங்களோ அல்லது உங்கள் வீட்டிலோ யாரேனும் வயதாகிறது என்று கவலைப்படுபவர்களாக இருந்தால் சாதிக்க மனது மட்டும் போதும். மனதுக்கு வயதில்லை என இந்த கட்டுரையை பகிர்ந்து உத்வேகம் கொடுங்கள்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.