குழந்தைகள் எப்போது எல்லாம் பொய் சொல்வார்கள்?

பள்ளிக்கூடம் முடிந்து விடுமுறை காலம் தொடங்கிவிட்டது. இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது தான் பெற்றோர் அவர்களை அதிக நேரம் கண்காணிக்க வேண்டி வருகிறது.

இந்த கண்காணிப்பில் ஒரு சில அப்சர்வேஷன்களும் நடக்கும்.

தங்கள் குழந்தைகளின் குணாதிசயங்களை புரிந்து கொள்வதற்கான காலமாக கோடை விடுமுறை பெரும்பாலான பெற்றோர்களுக்கு பயன்படும்.

அப்படி கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் பல பொய்களை சொல்லும்போது எப்படி கண்டறிவது? பெரும்பாலும் என்னென்ன காரணங்களுக்காக அவர்கள் பொய் சொல்கிறார்கள்? என்பதை தற்போது பார்க்கலாம்.

பயம்

எந்த ஒரு குழந்தையும் முதல்முறையாக பொய் சொல்லும் போது அதற்கு பயம் ஒரு முக்கிய காரணமாக அமையும்.

“உண்மையைச் சொன்னால் அம்மா அல்லது அப்பா, தாத்தா அல்லது பாட்டி யாரேனும் அடிப்பார்கள், திட்டுவார்கள். அதற்கு பொய்யை சொல்லி சமாளித்து தப்பி விடலாம்” என்று குழந்தைகள் யோசிக்கக்கூடும்.

சுருக்கமாக பேசுங்கள்

ஒருவேளை உங்கள் மீது உள்ள பயம் காரணமாக குழந்தை உங்களிடம் பொய் சொல்ல ஆரம்பித்தால் ஆரம்பத்திலேயே அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. பொய் சொல்வது என்பது பிற்காலத்தில் அவர்களது வாழ்வில் பல்வேறு கெட்ட வகையான தாக்கங்களை ஏற்படுத்திவிடும்.

ஒரு பெற்றோர் காலம் முழுக்க கூடவே இருந்து வழி காட்ட முடியாது என்பதற்காகத்தான் சிறுவயதிலேயே நற்குணங்களை சொல்லி வளர்த்துகின்றனர்.

அந்த வகையில் பொய் சொன்னால் ஏற்படும் பின் விளைவுகளை மிக நீண்ட உரையாக லக்சர் எடுக்காமல் மிக சுருக்கமாகவும் அதே சமயம் விளக்கமாகவும் சொல்வது நல்லது.

சுய ஒப்புதல் வாக்குமூலம்

பெற்றோர் தங்களது வாழ்வில் பொய் சொன்னபோது எப்படி ஒரு விஷயத்தில் இருந்து தப்பித்தார்கள்? ஆனால், அதுவே அவர்களது வாழ்வில் பின்னால் எவ்வளவு பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது ? அதை சமாளிக்க என்னென்னவெல்லாம் செய்தார்கள்? போன்ற வாழ்க்கை பாடங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம்.

எனவே பொய் சொல்வதால் ஏற்படும் பின்விளைவுகளை குழந்தைகள் நன்றாக கவனித்துக் கொள்வார்கள்.

எஸ்கேபிசம்

பெற்றோர்கள் தங்களது காரியங்களை குழந்தைகள் மூலம் சாதிக்க விரும்பினால், அவர்கள் குழந்தைகளுக்கு சில விஷயங்களை சொல்லி வலை விரிக்க பார்ப்பார்கள்.

ஆனால், இது குழந்தைகளுக்கு நன்றாக தெரிந்து விடும்.

உதாரணத்துக்கு குழந்தைகளுக்கு பிடிக்காதவர்களின் வீட்டுக்கு செல்லலாம் என்று ஒரு அம்மாவோ அப்பாவோ குழந்தையை சமாதானம் செய்ய முயலும் போது அங்கு சென்றால் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி கொடுப்பதாக அவர்கள் வாக்குறுதி கொடுப்பார்கள்.

ஆனால் உண்மையிலேயே குழந்தைக்கு அங்கு வர விருப்பம் இல்லை என்றால், அவர்கள் தனக்கு வகுப்பு இருப்பதாகவும் தனக்கு வேறு ஏதேனும் கோர்ஸ் படிக்க வேண்டும் என்றும் கூட பொய் சொல்லி தப்பிக்க பார்ப்பார்கள்.

எனவே ஒரு விஷயத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் பொய் சொல்கிறார்கள் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.

பாராட்டு

குழந்தைகள் பொய் சொல்லும் போது கண்டிக்கும் அதே பெற்றோர் அவர்கள் உண்மைகளை கூறும் போது பாராட்டியாக வேண்டும்.

உண்மைகளை சொல்லும் போது கிடைக்கும் பாராட்டு அவர்களுக்கு பிடித்திருந்தால் அவர்கள் எப்போதும் பெற்றோரிடம் உண்மையையே சொல்ல வாய்ப்பு உண்டு.

அமைதி

குழந்தைகள் பொய் சொன்னால் பெற்றோர் உடனடியாக கோபப்பட்டு அவர்களை கண்டிப்பது, அடிப்பது, திட்டுவது, சூடு வைத்து விடுவேன் அல்லது வேறு ஏதாவது தண்டனை கொடுத்து விடுவேன் என மிரட்டுவது போன்றவை சரிப்பட்டு வராது. இது குழந்தைகளை நல்வழிப்படுத்திக் கொண்டு வரவும் உதவாது. எனவே அமைதியான முறையில் தான் குழந்தைகளை கையாள வேண்டும். அப்போது மீண்டும் கண்டித்து பொய் சொல்கிறாயா? என மிரட்டினால் அவர்கள் இன்னும் நம்பும்படி பொய் சொல்வார்களே தவிர பொய் சொல்லும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

உணர்வுகளை மறைக்க

ஒரு குழந்தை தனக்கு உண்மையில் கோபம் வருகிறது என்றால் அந்த கோபத்தை காண்பிக்காமல் இருக்க அமைதியாக இருப்பார்கள். ஏன் இப்படி இருக்கிறாய்? என சொல்லும்போதும் கேட்கும் போதும் ஒன்றும் இல்லை அல்லது வேறு ஏதேனும் காரணம் என சொல்லி அவர்கள் பொய் சொல்வார்கள்.

ஆனால், இந்த பொய்களை பெற்றோர் மிக எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

குற்றங்கள்

குழந்தைகளுக்கு எதிராக பெரும்பாலும் குற்றங்கள் நடைபெறும் போது குழந்தைகள் அமைதி காக்கவும், தங்களது உணர்வுகளையும் தங்களது பிரச்சனைகளையும் மறைக்கவும் பார்ப்பார்கள். இத்தகைய விஷயங்களை பெற்றோர் கண்டுகொள்ளாமல் விட்டால், அந்த குற்றம் குழந்தைகளுக்கு தொடர்ந்து நடைபெற கூடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE