இரவு நேர நிம்மதி தூக்கம்? எப்படி சாத்தியம்? பாகம் 2

இக்கட்டுரையின் முதல் பாகத்தைப் படிக்க இங்கு கிளிக் செய்யலாம்.

மின்விளக்குகளை எரிய விடும் போதும் அதிலிருந்து உமிழப்படும் வெப்பமானது அறைக்குள் நிறைந்திருக்கும். எனவே, மாலை நேரத்தில் பெட்ரூமில் சிறிய விளக்கை மட்டும் போடுவது நல்லது.

கொசு இல்லாத நேரத்தில் ஜன்னல் கதவுகளை நீக்கிவைக்கலாம். அல்லது கொசுவலைகளை அடித்து பாதுகாக்கலாம்.

ஆனால் அந்த ஜன்னல் ஓரத்தில் அதிக விலை உயர்ந்த போன், நகைகள், லேப்டாப் உள்ளிட்டவற்றை வைப்பதும் ஜன்னலுக்கு அருகிலேயே நகைகளை அணிந்து கொண்டு படுப்பதும் பாதுகாப்பானது அல்ல.

உள்ளிருக்கும் வெப்ப காற்றை வெளியேத்தள்ள எக்ஸாஸ்டிங் ஃபேன் மாட்டலாம்.

மாலை நேரத்தில் உடற்பயிற்சி நல்லது. இது உடலுக்கு அதிக களைப்பை கொடுத்து அனல் காற்றை மறந்து உறங்கச் செய்யும்.

தியானம் உடற்பயிற்சியோடு உறக்கத்துக்கு முந்தைய சிறிய குளியல் உடலின் வெப்பத்தையும் சீராக பராமரிக்க உதவும்.

அதிக சத்தமுள்ள ஃபேன் ஆக இருந்தால் ஒன்று பேனை ரிப்பேர் செய்யவும். அல்லது காதில் பஞ்சு இயர் பிளக் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

அனைத்தையும் விட மிகச் சிறந்த வழி எதுவானால், நம் முன்னோர்கள் வீடு தோறும் வேப்பமரம் புன்னை மரம் தென்னை மரம் என பல நிழல் தரும் மரங்களை நட்டிருந்தனர்.

கீற்றுக்கட்டிலில் மரத்தின் அடியில் படுத்துக்கொண்டு காற்றோட்டமாக வெயில் காலத்தை தாக்க பிடித்து வந்தனர்.

எனவே உங்கள் வீடுகளை சுற்றி மரம் இல்லை என்றால் மரங்களை நடுவது நல்லது. ஆனால், அது உடனடி பலன் தராது என நினைத்தீர்கள் என்றால் உங்கள் வருங்கால சந்ததியினருக்கு வேண்டி மரத்தை நட்டு விட்டு, தற்போதைக்கு ஏசி வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால், ஏசி வாங்கும் போது என்ன செய்ய வேண்டும்? என்னென்ன விஷயங்களை கவனித்து வாங்க வேண்டும்? ஏமாறாமல் இருப்பது எப்படி? எந்த அளவுள்ள அறைக்கு எத்தனை டன் அளவுள்ள ஏசி வாங்க வேண்டும்? என்பதை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE