தகிக்கும் வெப்பத்திலும் நிம்மதியா தூங்குவது எப்படி? சூப்பர் டிப்ஸ்

ஒரு மனிதனுக்கு உணவு நீர் எவ்வளவு முக்கியமோ அதேபோல உயிர் வாழ்வதற்கு குறிப்பாக நோய்கள் இன்றி உயிர் வாழ்வதற்கு மிக அத்தியாவசியமான ஒன்று தூக்கம். போதிய தூக்கம் இல்லாவிட்டால் மாரடைப்பு பக்கவாதம் இதய செயலிழப்பு என பல நோய்கள் வரலாம்.

ஏற்கனவே ஏதேனும் உங்கள் வாழ்வில் பிரச்சனைகள் இருந்தால் அது தூக்கத்தை கெடுக்கும். ஆனால் இந்த கோடை காலத்தில் பிரச்சனை இல்லாத நிம்மதியாக வழக்கமாக உறங்கும் குழந்தைகள் கூட தூங்க முடிவதில்லை.

அதுவும் குறிப்பாக தங்களது வீட்டின் கூரைக்கு மேல் வேறு ஒரு வீடுஇல்லாதவர்களும், கூலிங் டைல்ஸோ, கூலிங் பெயிண்டோ அடிக்காமல் இருப்பவர்களும் இரவில் நிம்மதியாக உறங்குவது கஷ்டம்.

இதற்கு காரணம், பகல் நேரத்தில் சூரியனிலிருந்து வரும் வெப்பத்தை கான்கிரீட் அல்லது ஆஸ்பெட்டாஸ் அல்லது ஓட்டு கூரைகள் கிரகித்துக் கொள்ளும்.

அது மாலையில் சூரியன் மறைந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிடத்தின் வழியே இறங்கி பூமியை அடையும். அதுபோக ஏற்கனவே பூமிக்குள்ளும் வெப்பம் இருக்கும் போது அது இரவு நேரத்தில் மேல்நோக்கி நகர்ந்து வீட்டு தரை, கூரை என அனைத்து இடங்களுமே வெப்பமண்டலமாக மாற்றிவிடும்.

இதன் காரணமாக வெட்கை அதிகமாகி தூங்க முடியாமல் போகும்.

எவ்வளவுதான் ஃபேன்களை அதிக ஸ்பீடில் வைத்தாலும் கூட அனல் பொறுக்காது.

அத்துடன் சீலிங் ஃபேன் போடும்போது அது கான்கிரீட் கூரையில் இருக்கும் வெப்பத்தை கிரகித்து கீழே இழுத்து அது நம் மீது உமிழும். இதன் காரணமாகவும் உறங்க முடியாது. இதனால்தான் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெயிலுக்கும் குளிருக்கும் ஏற்ப ஃபேனின் சுழற்சி கீழிருந்து மேலாகவும் மேலிருந்து கீழாகவும் காற்றை கிரகிக்கும் வகையில் வலது புறமும் இடது புறமும் தேவைக்கு ஏற்ப சூழலும் வகையில் மாற்றி அமைக்கும் வசதி உள்ளது.

ஆனால், இங்கு அந்த வசதி குறைவு என்பதால் பெரும்பாலானோர் தென்னங்கீற்று போட்டு கூரையை குளிர்விப்பது, பசுமை நிற போர்வை போல் பொருத்துவது, ஃபிளக்ஸ் பேனர்களை கூரை மீது போடுவது தார்போலின் என்ற தார்ப்பாய்களை விரிப்பது என பல வேலைகளையும் செய்து பார்ப்பார்கள்.

ஆனால், ஏசி கொடுக்கும் அளவிற்கு குளிர்ச்சி கிடைக்காது என்பதுடன் ஏர் கூலராலும் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.

எனவேதான் emi களில் ஆவது ஏசியை வாங்கிவிட வேண்டும் என்று ஹோம் அப்ளையன்ஸ் கடைகளை நோக்கி கூட்டம் அலைமோதுகிறது.

இப்படி இருக்க இரவில் ஏசி இல்லாமலேயே நிம்மதியாக தூங்குவது எப்படி? என்பதை பார்க்கலாம்.

சீலிங் ஃபேனுக்கு பதில் டேபிள் ஃபேன் பயன்படுத்தும்போது அந்த ஃபேனுக்கு முன்பாக ஐஸ் கட்டிகளை வைக்கலாம்.

ஆனால், அது ஒவ்வொரு முறையும் கரைந்து போகும்போது நீங்கள் மீண்டும் அனல் காற்றை அனுபவிப்பீர்கள்.

இரவு நன்றாக உறங்க வேண்டும் என்றால் அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும். போதிய அளவு உடல்நீரேற்றம் இருந்தாலே வெளிப்புற அனலை ஓரளவு சமாளிக்கலாம்.

வெயில் காலத்தில் இரவில் உறங்கும் முன் இனிப்பு, டீ, காபி, கார்பனேட்டட் சோடா ஆகியவற்றை பருகக் கூடாது.

பெட் ரூமை குளிர்ச்சியாக வைக்க திரைச்சீலைகள் மூலம் நேரடி வெப்பம் உள்ளே வருவதை தடுக்க வேண்டும்.

இதன் தொடர்ச்சியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE