ப்ரா உள்ளாடை பராமரிப்பது எப்படி?

சம்மர் சமயங்களில் வெளியே சென்று வரும் பெண்களுக்கு எப்போது வீட்டுக்கு வந்து அனைத்து ஆடைகளையும் கழற்றி போட்டுவிட்டு நைட்டிக்கு மாறுவோம் என இருக்கும்.

அப்படி தங்களுக்கு சௌகரியமான இரவு நேர உடைக்கு மாறுவதற்கு முன் பெரும்பாலான பெண்கள் தங்களுடைய மேல் உள்ளாடையான ப்ரா அணியாமல் உறங்குவார்கள்.

இது குறிப்பாக வெயில் நேரத்தில் மிகவும் சௌகரியமாக இருக்கும் என்பதால் பலரும் இந்த வாய்ப்பை தேர்ந்து எடுப்பார்கள்.

அப்படி வெயில் காலத்தில் ப்ரா பராமரிப்பது எப்படி என பார்ப்போம்.

வெந்நீரில் துவைக்க கூடாது

பிராவை எப்போதும் வெந்நீரில் துவைக்க வேண்டாம்

இது பிராவின் ஷேப் ஐ மாற்றி விடும்

2 நாட்கள் அணியவேண்டாம்

ஒரு சிலர் பிராவை 2 நாள் அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்களுக்கு அணிந்து விடுவார்கள்.

இது உங்கள் வியர்வை, உடலில் இருந்து வெளியேறிய எண்ணெய் ஆகியற்றை உறிந்து ஒரு துர்நாற்றம் ஏற்படுத்தும்.

அதற்கு மேல் ஆடை அணிந்தாலும் கூட அந்த துர்நாற்றம் நீங்கள் கடந்து செல்லும்போது சற்று நேரம் காற்றில் இருக்கும்.

இது உங்கள் அருகில் வந்து நின்று பேசுவதற்கு கூட சிலருக்கு தயக்கத்தை ஏற்படுத்தலாம்.

முறுக்கி பிழிய கூடாது

பிராவை முறுக்கி பிழிய கூடாது. அதேபோல், strap ன் பிடிமானதில் காயபோட கூடாது.

அதேபோல் டெலிகேட் வாஷிங் என்ற மெஷின் வாஷை தவிர சாதாரணமாக வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க கூடாது.

எப்படி துவைக்க வேண்டும்?

20 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை மைல்டான சோப்புத்தூளில் ஊற வைத்து கையில் லேசாக துவைத்து போட்டாலே போதும்.

பிராவின் கம்பி மற்றும் ஷேப்பிங் பேட் ஐ தனியாக கழட்டிய பின் துவைக்கவும்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE