இன்னைக்கு ஒரு புடி என சாப்பாட்டை ருசிக்க ஏதோ போர்க்களத்தில் களமிறங்கும் வீரர்களைப் போல், கத்திக் கொண்டே பேசும் பாணி ஈர்க்கப்பட்டதால், அமோக வரவேற்பைப் பெற்றது தற்போது அந்த சேனலின் பிரதான கேரக்டர்களில் ஒருவரான பெரியதம்பித் தாத்தா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யூடியூப் பிரபலமான காலத்தில் இருந்து எத்தனையோ யூடியூப் சேனல்கள் வந்தாலும், இதுவரை எந்தவொரு தமிழ் யூடியூப் சேனலும் எட்டாத ஒரு உயரத்தை எட்டியது தான் வில்லேஜ் குக்கிங் சேனல். ஏற்கெனவே வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி எனத் தொடங்கப்பட்டு பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த யூடியூப் சேனலின் சாயலில் உள்ள வில்லேஜ் குக்கிங் சேனலுக்கும் வெகு சீக்கிரத்தில் கவனம் ஈர்க்கப்படக் காரணம் அவர்களின் அறிமுகமும், சத்தமான பேச்சும்தான்.

ஏற்கெனவே ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தபோது அவர்களுடன் சேர்ந்து உணவருந்தி அவர்களின் அடையாளத்தை மேலும் மேம்படுத்தியிருக்கிறார். விக்ரம் படத்தில் கூட பெரியதம்பி தாத்தா நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

தாத்தாவுக்கு என்ன ஆனது என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், அந்த சேனல் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், தாத்தாவுக்கு இருதயப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் குணமடைவார் என்றும் சேனலின் அட்மின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தாத்தாவின் ரசிகர்களும் பெரிய தம்பி தாத்தா விரைவில் குணமடைய வேண்டும் என்றும், அவர் மீண்டும் இன்னைக்கு ஒரு புடி என்ற வார்த்தையைக் கூறி சமைத்துக் காட்ட வேண்டும் என்றும் கோரி கமென்ட்டுக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

உங்களுக்கும் பெரிய தம்பி தாத்தாவைப் பிடிக்கும் என்றால், அவரது எந்த டயலாக் உங்களை அதிகம் ஈர்த்தது? எந்த வீடியோ மிகவும் பிடிக்கும் என்பதை கமென்டில் தெரிவிக்கவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE