அண்ணா உள்ளிட்டோர் களம் கண்ட தென் சென்னை தொகுதியில் மீண்டும் களம் இறங்கியுள்ள தமிழச்சி தங்கபாண்டியன் பற்றி த காரிகையில் காணலாம்.

கல்லூரி பேராசிரியராக இருந்த சுமதி ஒரு கொடியேற்று விழாவில் பங்கேற்பதாக பேச்சு. அவர் கல்லூரி பணி பாதிக்க கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் என அவரது பெயரை மாற்றி அழைப்பிதழ் அச்சிடுமாறு கூறியவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

கருணாநிதி அவர்களின் குடும்பத்திற்கும் இன்ன பிற திமுக தலைவர்களுக்கும் தங்க பாண்டியனின் மகள் சுமதி நன்கு பரீட்சயம்.

தற்போது தொழில்துறை அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு தமிழச்சி தங்க பாண்டியனின் அக்கா ஆவார். வனப்பேச்சி உள்ளிட்ட நூல்களை எழுதிய தமிழச்சி தங்க பாண்டியனுக்கு தமிழ் என்றால் மிகவும் பிரியம். இதன் காரணமாகத்தான் இவரது சுமதி என்ற பெயரை தமிழச்சி தங்க பாண்டியனாக மாற்றி வைத்திருந்தார் கலைஞர் கருணாநிதி.

கடந்த முறை போட்டியிட்ட போதே, அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தனை விட 2,62,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று இருந்தார் தமிழச்சி தங்கபாண்டியன்.

ஐடியும் ஆன்மீகமும் நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த தென் சென்னை தொகுதி விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, டி நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. தொழில்துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான பகுதியாக பார்க்கப்படும் தென் சென்னையில் தற்போது மீண்டும் களமிறங்குகிறார் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்.

இந்த தொகுதியில் ஏற்கனவே பேரறிஞர் அண்ணா, டி டி கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்டோர் வெற்றி பெற்றிருந்தனர். முரசொலி மாறன், ரா வெங்கட்ராமன், வைஜயந்திமாலா, டி ஆர் பாலு என ஏற்கனவே 7 முறை திமுக இந்த தொகுதியில் வெற்றி பெற்று அதை தனது கோட்டையாக கட்டமைத்துள்ளது.

இந்த தொகுதிகள் தமிழச்சி தங்க பாண்டியனுக்கு போட்டியாக அவரது தோழியாக கருதப்படும் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெ ஜெயவர்த்தன் மீண்டும் தமிழச்சி தங்கபாண்டியனை எதிர்த்து போட்டியிடுகிறார்.

சபாஷ் சரியான போட்டி என்று ஊடகங்களில் கருத்துக்கள் வலம் வந்தாலும் தொகுதி பிரச்சனைகளுக்கு முன்னர் கண்ட தீர்வுகளும் ஆளுமை திறன்களுமே இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

பெருங்குடி குப்பைமேடு திடக்கழிவு மேலாண்மை கையாளப்படாததும் ஐடி நிறுவனங்களின் கோரிக்கையும் குடிநீர் தட்டுப்பாடுகளும் இந்த தொகுதியில் முக்கிய பிரச்சினையாக தொடர்கிறது.

தனிப்பட்ட வாழ்க்கை

தமிழச்சி தங்கபாண்டியன் காவல் துறை அதிகாரி சந்திரசேகரை திருமணம் செய்து அவருக்கு இரு மகள்கள் உள்ளனர். 61 வயதான தமிழச்சி தங்கபாண்டியன் தனது தந்தை தங்கபாண்டியன் இறந்தபோது கையறு நிலை என்ற பாடலை எழுதி கவிஞராக உருவெடுத்தார். இதை அடுத்து பிசாசு என்ற திரைப்படத்தில் வரும் ‘போகும் பாதை தூரம் இல்லை’ என்ற பாடலையும் இவர் எழுதியிருக்கிறார். எஞ்சோட்டுப் பொண்ணுங்களே, வனப் பேச்சி, மஞ்சணத்தி, அருகன், அவளுக்கு வெயில் என்ற பெயர் ஆகிய கவிதைகளையும், முட்டு வீடு என்ற சிறுகதை நூலையும், ஐலேண்ட் டு ஐலேண்ட், இன்டெர்னல் கொலீக்யிஸ் ஆங்கில நூல்களையும் எழுதி இருக்கிறார் கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டியன்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE