ரொட்டி என்பது அனைவரும் சாப்பிடக்கூடிய உணவு தான். ஆனால் அது உடல் எடையையும் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இன்றைய பரபரப்பான காலத்தில் காலையில் எழுந்து பெரும்பாலானோருக்கு தோசை வார்த்து, சட்னி சாம்பார் செய்யவோ அல்லது இந்திய வகையிலான டிபன் உணவுகளை செய்து சமைக்கவோ நேரம் இருப்பதில்லை. குறிப்பாக ஹாஸ்டல் அல்லது குடும்பத்தை விட்டு வெளியே தங்கி இருப்பவர்கள் காலையில் 2 பிரெட் துண்டுகளையும் ஒரு கிளாஸ் ஜூஸையும் பருகி விட்டு செல்வார்கள். இது இன்ஸ்டன்ட் எனர்ஜி தரும். அந்த பிரட் துண்டுகளில் பீனட் பட்டர், நியூடெல்லா சாக்லெட், சாண்ட்விச் என பல வகையான ரகங்களில் செய்து சாப்பிடுவார்கள். அதில் அடிப்படையாக இருப்பது ரொட்டி துண்டுகள் தான்.

ஆனால் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் லோஃப் என்ற ரொட்டிகள் அல்ட்ரா ப்ராசஸ் ஃபுட்டாக கருதப்படுகிறது அதாவது அதிக அளவு ப்ராசஸ் சேர்க்கப்பட்ட, உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய கெமிக்கல்கள் அதில் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, தற்போது ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து போன்ற இடங்களில் நியூட்ரிசனிஸ்ட், டயடிஸ்ட் போன்றவர்கள் போல் பிரட் நியூட்ரிசனிஸ்ட் என்ற பெயரிலும் படித்துவிட்டு அதில் நிபுணத்துவமாக ஆலோசனைகள் வழங்கி வரும் உணவு ஆலோசகர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுடைய கூற்றுப்படி “யார் யார் எந்த வகையிலான பிரட்டை உட்கொள்ள வேண்டும் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

உடல் எடை குறைந்து இருப்பவர்களோ அல்லது ரத்த சக்கரை அளவில் எவ்வித பாதிப்பும் இல்லாதவர்களோ சாதாரண ரொட்டி துண்டுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், சர்க்கரை அளவில் கவனம் செலுத்துவதோ, டயட்டில் இருப்போரோ முழு கோதுமையினால் ஆன ரொட்டிகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டும் இன்றி புளிப்பான பிரட் உள்ளிட்ட பல்வேறு வகையான ரொட்டி வகைகளை அவரவர் உணவிற்கும் அவரவர் உடலில் ஏற்கனவே உள்ள வியாதிகள் மற்றும் பிரச்சனைகளுக்கும் ஒப்பிட்டு அதற்கு ஏற்ப எடுத்துக் கொள்வது நலம்” என்று அவர் கூறியுள்ளார்.

ரொட்டிகளில் பெரும்பாலும் கார்போஹைட்ரேட் 48 கிராம் அளவில் இருக்கும் ஆனால் இதுவே வெள்ளை நிற சாப்பாட்டில் 17 கிராம் அளவு தான் இருக்கும் கார்போஹைட்ரேட் இருக்கும். கார்ப்ஸ் இதில் அதிகம் இருப்பதால் அது உடனடியாக உடலில் கலந்து அதிக அளவிலான குளுக்கோசை கொடுத்து, இன்சுலின் சுரப்பையும் பாதித்து சர்க்கரை அளவை குபீரென ஏற்றக்கூடியதாகவோ அல்லது கொஞ்சம் ஓரளவு மாறுபாடான நிலையில் ஏற்றக்கூடியதாகவோ இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதே போல் ஆல் பர்பஸ் ஃபுளோர் என்ற மைதா மாவினால் உருவாக்கப்பட்ட பாஸ்தா உள்ளிட்ட உணவு வகைகளிலும் கார்போஹைட்ரேட் இருந்தாலும் ரொட்டி துண்டுகளில் தான் அதன் அளவு 48 கிராம் என்று அதிக அளவிலான கார்போஹைட்ரேட்டோடு இருப்பதாக கூறியுள்ளனர்.

எனவே நீங்களும் அடுத்த முறை சாண்ட்விச்காகவோ அல்லது ஏதேனும் ஒரு அவசர காரியத்திற்காக ரொட்டி துண்டுகளை பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தீர்களோ என்றால் உங்கள் உடல் நிலையும் கருத்தில் கொண்டு இதனை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அது இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உடலுக்குள் வருவதற்கும் டைப் 2 சர்க்கரை வியாதியானது கதவை திறந்து விடும் என்பது கவனத்தில் கொள்ளவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE