தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கான திட்டம் தெரியுமா?

தமிழகத்தில் பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர்கள், கைம்பெண்கள், வேலைவாய்ப்பற்ற இளையோர், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்குமே பல திட்டங்கள் உள்ளன. அந்த வகையில், கர்ப்பிணிகளுக்கான திட்டங்கள் கூட உள்ளன. இது, மத்திய அரசின் 60% சதவீத நிதியைப் பெற்று நடத்தப்பட்டு வரும் கர்ப்பிணிகளுக்கான நிதியுதவி திட்டம் ஆகும்.

மத்திய அரசின் ‘மாத்ரு வந்தனா’ என்ற திட்டமானது 2017ல் அறிமுகமானது. இதில் பேறு கால நிதியாகவும், ஊட்டச்சத்து மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

தமிழக அரசின் திட்டம்

35 ஆண்டுகளுக்கு முன்னரே கர்ப்பிணிகளுக்கான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்ற திட்டமானது நமது தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது. கர்ப்பிணிகளின் நலன் கருதி இந்த திட்டத்தையும் மத்திய அரசின் திட்டத்தையும் இணைத்து கர்ப்பிணிகளுக்கு பேறு கால நிதி வழங்கப்படுகிறது.

எவ்வளவு வழங்கப்படுகிறது

தமிழகத்தில் உள்ள கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனையில், பரிசோதனைகள் மற்றும் பிரசவம் பார்க்கிறார்கள் என்றால் அவர்களுக்கு 5 தவணைகளாக ரூ.14,000 நிதி பிரித்து வழங்கப்படும்.

அதுமட்டும் இன்றி ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன.

ஊட்டச்சத்துப் பெட்டகத்தில் என்னென்ன இருக்கும்?

`ப்ரோ பிஎல்’ ஊட்டச்சத்து மாவு 1 கிலோ, 200 மி.லி இரும்புச் சத்து டானிக் பாட்டில், 1 கிலோ பேரீச்சம்பழம், 1 கிலோ ஆவின் நெய், ஆல்பெண்டசோல் (Albendazole) குடற்புழு நீக்க மாத்திரைகள், கோப்பை ஒன்று, துண்டு மற்றும் பொருள்கள் வைக்கும் பை ஆகிய 8 பொருள்கள் அடங்கியுள்ளன.

தகுதி

19 வயது நிரம்பியிருக்க வேண்டும்

2 பிரசவத்துக்கு மட்டுமே இத்திட்டத்திவ் பலன் கிடைக்கும்

அதற்கு மேல் முதல் மற்றும் 5-வதுதவணை மட்டும் பெறலாம். ஆயினும் விதிகளுக்குட்பட்டது

குறைந்தது 5 அன்டனன்ட்டல் செக்கப் செய்திருக்க வேண்டும்

கணவன், மனைவி இருவரின் ஆதார் கார்ட் தேவை

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும்

கர்ப்பத்தை 12 வாரத்துக்குள் பதிவு செய்தல் வேண்டும்

RCH ID எனப்படும் எண்ணைப் பெற்றிருக்க வேண்டும் அதற்கு இந்த லிங்கில் பதிவு செய்யலாம். (PICME-Public Pre-Registration of Pregnancy (tn.gov.in))

ஸ்கேன்கள் அரசு மருத்துவமனையில் செய்திருக்க வேண்டும்.

இன்னும் யாரெல்லாம் இத்திட்டத்தில் பலன்பெறலாம்?

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்

உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பதிந்தவர்கள்

இலங்கை அகதிகள்

வெளியூரில் இருந்து வேலைக்கு வந்த மைக்ரன்ட்ஸ் எனப்படும் இடம்பெயர்ந்தவர்கள்

எங்கு பதியலாம்?

ஆரம்ப சுகாதார நிலையம்

துணை சுகாதார நிலையம்

ஆன்லைன்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE