ஃபீஸ் உங்க விருப்பம்தான். உண்டியலுக்குள் விருப்பப்படி போடச்சொல்லும் பெண் டாக்டர்

குழந்தைக்கு உடல்நிலைக் குறைவு ஏற்பட்டால் பெற்றோர் கண்டிப்பாக பதறிப்போவார்கள். அதுவும் மாசக் கடைசி என்றால் சொல்லவா வேண்டும். அக்கம்பக்கம், அலுவலகம் என பணம் புரட்டிச் செல்வதற்கே படாதபாடாகிவிடும்.

அப்படியிருக்கும்போது மருத்துவமனைக்குச் சென்றாலே குறைந்தது 500 ரூபாயாகும் நிலையில், உங்களுக்கு எவ்ளோ விருப்பமோ? அவ்ளோ மட்டும் பணம் கொடுங்க என நல்ல மருத்துவமமும் பார்த்து வருகிறார்
திருப்பூர் 60 அடி சாலையில் இயங்கிவரும் குழந்தைகள் நல கிளினிக்கில் மருத்துவர் இந்துப்பிரியா, சிகிச்சை பெற வருபவர்கள் தங்களின் விருப்பப்படி கட்டணம் செலுத்தும்வகையில், “Pay As You Wish” என்ற முறையில் கட்டணம் வசூலித்து வருகிறார்.

அதற்கென ஓர் உண்டியலை வைத்திருக்கிறார். அதன்படி, மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற்றுச் செல்லும் ஒவ்வொருவரும் தங்களது கையிருப்பு பணத்துக்கு ஏற்றாற்போல கட்டணத்தை உண்டியலில் செலுத்திவிட்டு செல்கின்றனர். யார், எவ்வளவு போடுகிறார்கள்? என்றெல்லாம் யாரும் கண்காணிப்பதில்லை.

சிகிச்சையிலும்கூட ஒரு குறையும் வைப்பதில்லை என அங்கு வரும் பெற்றோர் குறிப்பிட்டு வருகின்றனர். குழந்தையின் உடல்நிலை குறித்து எவ்வளவு கேள்விகள் கேட்டாலும் அதை முழு முனைப்போடு கவனித்து தெளிவாக விளக்கம் கூறி வருகிறார் எனக் குறிப்பிட்டார்.

இவரது கணவர் கீர்த்தி தியாகராஜன் எலும்பு மூட்டு மருத்துவர் ஆவார். இவர், 30 ரூபாய் கட்டணத்தில்தான் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தன் தந்தைக்கு மருத்துவ செலவுகளுக்காக தங்கள் குடும்பத்தினர் பட்ட சிரமத்தைப் பிறர் படக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இந்த சேவையை செய்து வருவதாக அவர் கூறுகிறார்.

மருத்துவம் போக மருந்து மற்றும் பிற சேவைகளுக்கும் குறைந்த கட்டணத்தை இவர்கள் பெற்று வருகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE