குழந்தைகளுக்கு ஆசனவாய் அரிப்பும், தூக்கத்தில் பல் நரநரப்பதும் இதற்குத்தான்

பெரியவர்களும், ஒரு சில குழந்தைகளும் நன்கு உறங்கும்போது, பல்லை நரநரவென கடிப்பார்கள். அவர்களுக்கு அடிக்கடி மூக்கு மற்றும் ஆசனவாய் எனப்படும் மலம் வெளியேறும் இடத்தை கை வைத்து குடையும் பழக்கம் இக்கலாம். இதற்கு ஆசனவாய் அரிப்பே காரமாகும். அதேபோல், அவர்கள் வழக்கம்போல் சாப்பிடுவதும் குறையும். அடிக்கடி மூக்கை நோண்டுவார்கள். ஆசனவாயில் அரிப்பு இருக்கும். சரியாக உணவருந்த மாட்டார்கள்.

ஒருவேளை எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களுக்கு உடல் எடை மட்டும் அதிகரிக்காமல் ஒல்லியாகவே இருப்பார்கள். இதனால் இரவில் நன்கு உறங்காமல் அடிக்கடி எழுந்து அழுவார்கள். இவற்றுக்கெல்லாம் அவர்கள் வயிற்றில் பூச்சி இருப்பதுதான் அறிகுறி என சொல்லப்படுகிறது.

வயிற்றில் புழு எப்படி வரும்?

நம்மிலும் நம்மைச் சுற்றிலும் புழுக்கள் இருக்கும்.

அதற்கு அதிக இனிப்பு சாப்பிடுவதும், ஒரு காரணம்.

சுற்றுப்புறம் சுத்தமின்மையாக இருந்தாலும், குடற்புழுக்கள், கீரை பூச்சி உருவாகும்.

எத்தனை வகைப் புழுக்கள் உள்ளன?

புழுக்களில் உருண்டை புழு, கொக்கி புழு, நூல் புழு, நாடா புழு என பல வகையுண்டு

அந்தப் புழுக்கள் முட்டையிடும்போது, அது மலம் மூலம் வெளியேறும்.

மலமானது நிலத்தில் மண்ணில் கலந்துவிடும்.

அது குழந்தைகள் மண்ணில் விளையாடுகையில், நக இடுக்குகளில் கிருமியாக சேரும்.

நகம் வெட்டாமலும், கை கழுவாமலும் வாயில் கை வைத்தால் புழுக்கள் வயிற்றுக்குள் சென்றுவிடும்.

செருப்பில்லாமல் வெறும் காலில் செல்லும்போது, கொக்கிப்புழுக்கள் உடலுக்குள் செல்லும்

பூச்சிகளை எப்படி வெளியேற்றுவது?

  1. அரசு ஆரம்ப சுகாதார மையங்களில், பள்ளிகளில் இலவச குடற்புழு நீக்க மருந்து கிடைக்கும். (வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் இந்த மருந்து எடுத்தால்தான் முழு தீர்வு.)
  2. இளம் கொழுந்து வேப்பிலைச் சாற்றை மோருடன் கலந்து, சற்று உப்பு போட்டு கொடுக்கலாம்.
  3. வெதுவெதுப்பான நீரில் பப்பாளி ஜூஸ் கலந்து வாரத்துக்கு இரு முறை பருகலாம்.
  4. நெய்யில் வறுத்த பூண்டை சாதத்துடன் சேர்த்து கொடுக்கலாம்.
  5. கை, கால் நகங்களை அவ்வப்போது வெட்டிவிடவும்.
  6. ஈக்கள் மொய்த்த பண்டங்களை சாப்பிடக் கூடாது.
  7. கால்களில் செருப்பு அணியாமல் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது.
  8. உலர் பூசணி விதைப் பொடியை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வாரம் இருமுறை பருகவும்.
  9. இதன்பின்பும் அறிகுறிகள் தொடர்ந்தால், மருத்துவரை கலந்தாலோசித்து மருந்து கொடுக்கவும்.
  10. வளர்ப்புப் பிராணிகளை முகத்தோடு முகம் வைத்து கொஞ்சக்கூடாது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE