தற்காலத்திலேயே கார் ஓட்டிச் செல்லும் பெண்களை சற்று திரும்பிப் பார்த்துச் செல்வோர் ஏராளம். அப்படி இருக்க 1980களில் அம்பாசிடர் கார் ஓட்ட கற்றுக்கொண்ட ஒரு பெண் அடுத்த 3 ஆண்டுகளில் கனரக வாகனங்களை இயககும் லைசன்ஸ் பெற்று தற்போது 71 வயது ஆகியும் இயங்கி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? இச்சம்பவம் கேரளாவில் தான் நடந்துள்ளது.

மணியம்மா என அழைக்கப்படும் ராதாமணி பாட்டிக்கு 72 வயது.

இவரது கணவர் கனரக வாகனங்களுக்கான ஓட்டுனர் பயிற்சி வழங்கும் பள்ளியை நடத்தி வந்தார்.

எனவேதான் இவரும் 1980 களிலேயே கனரக வாகனங்களை இயக்கிய பெண் என்ற சாதனையை புரிந்தார்.

2004ல் இவரது கணவர் இறந்த பின்பு ஆரம்பத்தில் சற்று திணறினார். பின்பு இந்த தொழிலை கையில் எடுத்து அவர் சிறப்பாக செய்து வருகிறார்.

72 வயதாகியும் டிப்ளமோவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார் இந்த மூதாட்டி.

இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் கார் கனரக வாகனம் எக்ஸ்கவெட்டர், நீண்ட ரக வாகனங்கள், ஃபmபோர்க்லிஃப்ட்டர் ஜேசிபி பொக்லைன் என 11 வகையான லைசென்ஸ்களை கைவசம் வைத்திருக்கும் ஒரே 70 வயதுக்கு மேற்பட்ட பெண்மணி என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.

பெண்கள் என்னதான் லைசன்ஸ் வாங்கினாலும் சாலையில் வாகனம் ஓட்ட பயந்து கொண்டு அவர்கள் முக்கியமான இடங்களுக்கு செல்லக்கூட ஆண் துணையை எதிர்பார்த்து தயங்கி காத்திருக்கின்றனர் என்றும் தன்னம்பிக்கையுடன் தைரியமாகவும் அவர்கள் வாகனங்களை இயக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE