காப்பர் பாத்திரத்தில் வைத்து நீர் பருகுவது பாதுகாப்பானதா?
என்னதான் பாரம்பரியத்தை மறந்து போனாலும் தற்போதும் மண்பாண்டங்களும் செப்பு போன்ற உலோகப் பொருட்களும் மக்கள் மத்தியில் மீண்டும் புழக்கத்தில் வரத் தொடங்கியுள்ளது.
வீட்டில் பருகும் தண்ணீரை கூட மண்பானையிலும் காப்பர் என்ற செப்பு பாத்திரத்திலும் ஊற்றி வைத்து பருகுகின்றனர்.
ஆனால், காப்பர் பாத்திரத்தில் தண்ணீரை தொடர்ந்து பருகி வருவது ஆபத்தா? அல்லது பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது..
தற்போது அறிவியல் பூர்வமாக அதன் விளைவுகளை த காரிகையில் பார்க்கலாம்.
காப்பர் என்பது மனித உடலுக்கு தேவையான ஒரு முக்கியமான சத்து தான். இது, இணைப்புத் திசுக்கள், எனர்ஜி என்ற சக்திக்கான உற்பத்தி, என்சைம்களின் செயல்பாடு ஆகியவற்றுக்கு மிக சிறிதளவில் காப்பர் சேர்த்துக் கொள்வது நல்லது தான்.
நம் உடலில் உள்ள ஈரல் என்ற உறுப்பு விஷத்தன்மையை முறித்து மெட்டபாலிசத்தை சீராக பராமரிக்க உதவும். ஆனால், அது காப்பரில் கலந்து தண்ணீரை பருகும் போது சற்றே டிஸ்டர்ப் ஆகிறது.அதில் உள்ள ஆன்ட்டி மைக்ரோ மூலக்கூறுகள் நீரை சுத்திகரித்தாலும் அதிக அளவுக்கான காப்பரை உடலில் நீண்ட காலத்துக்கு எடுத்துக் கொள்ளும் போது, அது காப்பர் விஷத்தன்மையாக மாறி, ஈரல் செயல்பாட்டையும் பாதிக்கக் கூடியதாக அமைகிறது.
உடலில் அதிக அளவு காப்பர் சேரும்போது அது காப்பர் விஷத்தன்மையை ஏற்படுத்துகிறது. இது இயற்கையான முறையில் படுத்தும் மெக்கானிசத்தை பாதித்து ஈரலில் காப்பர் மெட்டபாலிசத்தை பாதிக்கிறது. இது ஆக்ஸிஜனேற்றப்பட்டு ஸ்ட்ரெஸ்ஸை கொடுத்து ஈரலின் செல்களை பாதித்து விடுகிறது.
ஆனால், இந்த பாதிப்பானது ஒவ்வொருவருக்கும் வயது, ஏற்கனவே உள்ள உடல்நல பிரச்சனை, மரபணு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் வேறுபடும்.
ஒருவேளை உங்கள் உடலில் அதிக காப்பர் சேர்ந்து விட்டால் உங்களுக்கு பின்வரும் பிரச்சனைகள் ஏற்படலாம்.
குமட்டல்
வாந்தி
பேதி
குழப்பம்
நரம்பியல் குறைபாடுகள்
இம்மியூன் என்ற நோயெதிர்ப்பு செயல்பாடு பாதிப்பு
வயிறு வலி
தலைவலி
அடிக்கடி வாயில் ஒரு உலோகம் போன்ற சுவை இருப்பதாக உணர்வது
ஆகியவை தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இது உடல் நிலையை மேலும் மோசம் அடையச் செய்யாமல் இருக்கும்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.