கொழுப்புக்காக மட்டனை தவிர்க்கிறீங்களா? கொழுப்ப பிரிக்க புது ஐடியா!

மட்டன் எப்போதும் ஒரு சிறந்த ஊட்டச்சத்து தரும் இறைச்சியாகும். ஆனால், பிபி, சுகர், இருதய நோய், கொழுப்புச்சத்து அதிகமுள்ளவர்கள் மட்டன் சாப்பிடக்கூடாது என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஆனால், சாதாரணமான உடல்நிலை கொண்டவர்களும், மட்டன் கொழுப்பு எனக் கூறி அந்த உணவைத் தவிர்த்தவர்கள்தான் ஏராளம். ஆனால், சாதாரண உடல்நிலை இருப்பவர்கள் மாதம் ஒரு முறை மட்டன் சாப்பிட்டால் அதில் என்னென்ன பலன் உள்ளது என இந்த செய்தியில் காணலாம்.

100 கிராம் செம்மறி ஆட்டில் 300 கலோரிகள் உள்ளன. 20 கிராம் கொழுப்பு, புரோட்டீன் 25 கிராமும், கொலஸ்டிரால் 100 மி.கிராமும் உள்ளன.

100 கிராம் வெள்ளாட்டு கறியில், 130 கலோரிகளும், 3 கிராம் கொழுப்பு, 27 கிராம் புரோட்டீன் உள்ளன.

எனவே கொழுப்பு விவகாரத்தில் வெள்ளாட்டுக்கறி சிறந்தது என்றாலும், இருவகை இறைச்சியிலுமே பிற அத்யாவசியச் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், வைட்டமின் B12 சத்துக்கள் உள்ளன.

அப்போதும் கொழுப்பைத் தவிர்ப்பவர்கள், குறைவான எண்ணெயோடு, வேக வைத்து, கிரில் செய்து சாப்பிடலாம்.

இல்லையெனில், தேவைப்பட்டால் மட்டனுடன் உள்ள கொழுப்பை மட்டுமே ஆயிலாகப் பயன்படுத்தி மிளகு தூள் சேர்த்து, சூப் போல சாப்பிட்டலாம். மட்டனில் கொழுப்பை மட்டும் பார்த்து அதில் உள்ள அத்யாவசிய சத்துக்களைத் தவிர்க்க வேண்டாம்.

கொழுப்பைக் குறைக்க, கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், தோலோடு உருளைக்கிழங்கு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டனுக்குள் போட்டால் அது கொழுப்பை உறிஞ்சிவிடும்.

எள்ளு விதைகளில் மக்னீசியம் அதிகம் உள்ளன. ரத்த அழுத்த நோயை குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் கூடிய ஆற்றல் எள்ளில் உள்ள இந்த மக்னீசியத்தில் உள்ளன.

வெள்ளை எள்ளில் கால்சியம் உள்ளதால் அது எலும்புகளை வலுப்படுத்த உதவும். இது ஆஸ்ட்ரியோபோரோசிஸை தடுக்க உதவுகிறது.

புற்றுநோய்க்கு எதிரான பண்புகளும் இதில் உள்ளன. நல்ல கொழுப்பு, நார்ச்சத்து உள்ள எள்ளை மட்டன் குழம்பில் சேர்த்து சாப்பிடலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE