டாக்டர் சிவராமன் வீட்டு விசேஷத்தில் செய்த மாதுளம் பழ பொறியல்
டாக்டர் சிவராமனை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அவர் ஒரு பிரபலமான சித்த மருத்துவர்.
எந்தெந்த கெமிக்கல் நிறைந்த பொருட்களுக்கு என்னென்ன மாதிரியான பக்க விளைவு என எடுத்துச் சொல்வதில் வல்லவர்.
குறிப்பாக ஆரோக்கியத்தின் மீதும் உணவு வகை மருந்தின் மீதும் அவர் அதிக நம்பிக்கை கொண்டவர். அவ்வாறே தனது பின் தொடர்பாளர்களையும் ஆரோக்கியமான உணவுகளை தேடித் தேடி சாப்பிட ஊக்குவிப்பவர்.
அவரது முகம் இடம் பெற்ற ரீல்ஸ்கள் எல்லாம் மீம்ஸ்களில் கூட இடம் பெற்றன. அவ்வளவு பிரபலமான அந்த சித்த மருத்துவர் ஊரையே அழைத்து சாப்பாடு போடும் ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. அதுதான் அவரது வீட்டு பிள்ளைக்கு நடந்த கல்யாணம்.
இந்த கல்யாணத்துக்கு பல்வேறு பிரபலங்களும் வந்திருந்தனர்.
அவர்கள் வந்து ஆஹா ஓஹோ எனப் புகழும் அளவு சாப்பாடு அமைந்ததற்கு காரணம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் மாதம் பட்டி ரங்கராஜன் சமையல்தான்.
இந்த இரு ட்ரெண்டிங் பிரபலங்களுமே இணைந்த ஒரு நிகழ்வு என்றால் ஸ்பெஷல் ஐட்டம் எதுவும் இருக்காதா என்ன?
அப்படிப்பட்ட ஒரு ஸ்பெஷல் ஐட்டம் தான் மாதுளம் பழம் பொரியல்
மாதுளம் பழத்தில் எப்படி பொரியல் செய்வது என்ற ரெசிபியை ‘த காரிகை’ உங்களுக்கு வழங்குகிறது..
தேவையான பொருட்கள்
எண்ணெய் சிறிதளவு
கடுகு
கறிவேப்பிலை உளுத்தம் பருப்பு கடலை பருப்பு மாதுளம் பழ விதைகள்
பச்சை மிளகாய் வெங்காயம் தேங்காய் துருவல்
செய்முறை
முதலில் அடுப்பை பற்ற வைத்து வாணலியை வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
பின்னர் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை அனைத்தையும் பொன்னிறமாகும் வரை தாளிக்கவும்.
வெட்டிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயும் உள்ளே சேர்த்து நன்றாக வதக்கவும்.
மாதுளம் பழத்தில் இனிப்பு சுவை இருக்கும் என்பதால் பச்சை மிளகாய் பயன்படுத்திக் கொள்ளவும். சிவப்பு மிளகாய் காரமாக இருக்கும் இந்த பொறியலுக்கு ஒத்து வராது..
பின்பு உரித்த மாதுளம் பழ முத்துக்களை அதில் எடுத்து போட்டு ஒரு கலக்கு கலக்கவும்.
மாதுளம் பழத்தை வேக வைக்கவோ சுண்ட வைக்கவோ வேண்டிய அவசியம் இல்லை.
போட்டு கிளறியவுடன் தேங்காய் பூ போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி விடலாம்.
முன்னதாக வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கும் போது லேசாக அதற்கு மட்டும் உப்பு சேர்த்தால் போதுமானது.
மாதுளம் பழத்தை சாப்பிடாதவர்கள் கூட உள்ளங்கையில் அள்ளி அளந்து அப்படியே வாயில் போட்டு இந்த பொறியலை காலி செய்து விடுவார்கள்.
நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.